தனியார் கல்வி நிலையங்களை மூடும் தீர்மானத்தில் மாற்றமில்லை!!

யாழ்.மாவட்டத்தில் தனியார் கல்விநிலையங்களை ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடும் தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக வேறெந்த அமைப்புக்களும் தன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமை இயக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை மறுத்து...

தாடியால் வாகன ஊர்தியை இழுத்து முதியவர் உலக சாதனை!!

7நிமிடம் 48செக்கன்களில், 1550கிலோகிராம் எடை கொண்ட வாகன ஊர்தியை 400மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தென்மராட்சி-மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக...
Ad Widget

டிக்டொக் காதல் விபரீதம் : மனைவியை விபசாரத்தில் தள்ள முயற்சி?

டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதல் வசப்பட்டுள்ளார். அந்நிலையில் , பாடசாலை கல்வியை கைவிட்டு , வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்கு...

யாழில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்த இருவர் கைது!!

வெளிநாட்டிற்குச் செல்வோருக்குப் போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப் பத்திரம் போலியானது எனப் பொலிஸாரினால் கண்டறியப்பட்டு அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து...

அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி!!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் நேற்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100kmph வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா – .அனுராதபுரம் வரையில்...

முல்லைத்தீவில் மர்மநபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை!!

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் நுழைந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...

இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கதுருவெலயிலிருந்து...

ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை!!

உக்ரைனின் துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் பேய் படையின் ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் பக்மூத் நகரத்தில் வைத்து ரஷ்ய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ஃபாவால் 5,900 அடி தொலைவில் இருந்து கொல்லப்பட்டவர் பிராந்திய படைகளின் துணைத்தளபதி எனவும்...

மனிதப் புதைகுழிக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் காணாமல் போனவரின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு...

சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்த விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியிலும், சாதாரணத் தரப் பரீட்சைகள் 2024 ஆம் முதல் காலாண்டிலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

அபிவிருத்தி என்ற பெயரால் தமிழர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி!! : ஐங்கரநேசன்

வடக்கில் சீனித் தொழிற்சாலை அமைப்பது என்பது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரால் நிரந்தரமாகவே கையகப்படுத்தும் ஒரு தந்திரமுமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். வவுனியாவில் சீனித்தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மண்டைதீவு கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள்!!

மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்டபாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின்...

மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தமிழர் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால், மேலும் பல மனித புதைக்குழிகளை கண்டறிய முடியும் என்றும் இவர்கள் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர்...

ஐஸ்லாந்தில் அதிகரிக்கும் நில அதிர்வுகள்!

ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக் பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் 4700 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வுகள் அப்பிரதேசங்களில் நிலச்சரிவு அபாய நிலைமையை அதிகரித்துள்ளதாக அரச நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. அதிகரித்த நில அதிர்வுகள் மற்றும் எரிமலை சாம்பல் ஆகியவை எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அபாய நிலைமையை...

யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு மிரட்டல்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து...

யாழ் முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழில் முச்சக்கர வண்டிகளிற்கு டக்சி மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் என யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் மேலும் அவ்வாறு செய்யத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதைகுழியில் 13 மனித எச்சங்கள் அடையாளம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த மனிதப்புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணியுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே...

ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ். வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த தரம் மூன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி(08) ஒருவர் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத் தாக்கியதில் மாணவி கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவியின் நிலையை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகம்...

ரஷ்ய அதிபர் புடினை பார்க்க கண்ணீர் விட்டு கதறியழுத சிறுமி!

ரஷ்ய அதிபர் புடினை காண முடியாமல் கதறியழுத சிறுமியை, அதிபர் மாளிகைக்கு வரவழைத்து புடின் விருந்தளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள (Dagestan) தாகெஸ்தான் குடியரசுக்கு அதிபர் புடின் சுற்றுப்பயணம் சென்ற போது, அவரை பார்க்க 8 வயது சிறுமி (Raisat Akipova) ரைசாட் அகிபோவா வருகை தந்துள்ளார். இருப்பினும், கடும்...

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படும் பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!!

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளது பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகப்படும் மனித எச்சங்கள் உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (06) அகழ்வு பணிகள்...
Loading posts...

All posts loaded

No more posts