- Saturday
- April 11th, 2026
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஏக்கரும் மூன்று றூட் அளவிலான காணியொன்று இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில் உள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு செல்லும் வீதிக்கான காணியே இவ்வாறு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொது காணிகள் மற்றும் மக்களின் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சிச்...
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 076 545 3454 என்ற Whats App தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதேநேரம்...
”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களில் தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் நேற்று (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை...
கிளிநொச்சி, விநாயகபுரம் பகுதியில் காணாமல்போயுள்ள உயர்தர பாடசாலை மாணவி ஒருவரை கண்டறிய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். இந்த மாணவியைக் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். 18 வயதுடைய புவனேஷ்வரன் ஹனி என்ற மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார். குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில்...
மேற்குலகம் உடனான ரஷ்யாவின் புனிதப்போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிலிருந்து தொடருந்து பயணமாக ரஷ்யா வந்தடைந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு, பிரிமோர்ஸ்கி க்ராய் தொடருந்து நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலையத்திலிருந்து வோஸ்டோச்னி சென்ற கிம் ஜாங் உன்னை ரஷ்ய ஜனாதிபதி புதின் வரவேற்றுள்ளார். இதன் பின்னர்...
மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளுக்காக களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் கஞ்சா காணாமல் போய் உள்ளதாக தெரிவித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பதிவாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தெல்லிப்பழை பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி நீதிமன்ற பதிவாளர் விடுமுறையில் சென்றுள்ளார். மீண்டும் 10ஆம் திகதி பணிக்கு...
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள், குறித்த அகழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் உரியவாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று ( செவ்வாய்கிழமை) பல வைத்தியசாலைகளில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை வைத்தியசாலைகளின்...
உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (11.09.2023) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம்...
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டத்தின் போதான வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியான தனது மகளை கடத்த முயற்சித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தலினையும் மீறி தான் தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில் கலந்துகொண்டமையினால் அரசாங்க...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதியை எதிர்வரும் நாட்களில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரஷ்யாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும்...
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்றும் ஐந்தாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குறித்த அகழ்வு பணியில்...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட...
கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கோப்பாய் இராச பாதை வீதியில் பயணித்த வேளை மோட்டார்...
நீர்வேலி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த...
மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். இதனைத் தடுத்து நிறுத்தி மண்ணைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தையிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக் காணியை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களமும் அரச அதிகாரிகளும் வருகை...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்பட்ட சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அதேவேளை,பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை...
அடுத்த வருடம் பிரேசில் தலைநகரில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொண்டால் அவர் கைதுசெய்யப்படமாட்டார் என பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புடினிற்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் புடினால் பிரச்சினைகள் இன்றி பிரேசில் வரமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
