- Saturday
- April 11th, 2026
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி யாழ் நகரில் உள்ள வீதி வழியாக சென்று, இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக...
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு, சாதாரண தரப்...
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்று காலை இந்தியா – நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட குறித்த கப்பல் பகல் 1.15 இக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த...
எதிர்காலத்தில் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும் என்றும் மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர்...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றனர்....
திருநெல்வேலி பகுதியில் தவறான முடிவெடுத்து மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (08.10.2023) இடம்பெற்றுள்ளது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் நேற்றுமுன்தினம் (07) கோயிலுக்கு...
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ''நீதித்துறை மீது கை வைக்காதே'' என்னும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட...
கடந்த குளிர்காலத்தில் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள் உக்ரைனின் எரிசக்தி அமைப்பின் குறிப்பிடத்தக்க பகுதியை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் விமானப்படை அதன் மண்ணில் பதிவு செய்யப்பட்ட மோசமான தாக்குதலாக இதை கருதுகின்றது. ஈரான் வடிவமைத்த ஷாஹெட் காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியிருப்பது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை முறியடிக்கும் என்று செப்டெம்பர் மாதத்திற்கான தரவு...
கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 30 ஏக்கர் சந்திப்பதில் உள்ள வீடு ஒன்றின் மீது குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களுக்கு இடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை...
யாழில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் வேகமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கண் கடுமையாகச் சிவப்படைதல், கண்ணில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படுத்தல் இதன் அறிகுறிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...
முல்லைத்தீவு நீதிபதியாக இருந்த சரவணராஜா தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் அது தொடர்பாக அவரே தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி குறிப்பில், ''நீதிபதி சரவணராஜாவிற்கு மொழிப்பிரச்சனை இருந்திருக்கும் கூறுகின்றார்''...
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் அவரது தொலைபேசி...
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் இன்று (05.10.2023) ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட சுமார் 49 பேர் இறந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்...
மாணவியைக் கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தருவதில்லை என அவரது ஆசிரியர் கண்டித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இது குறித்து அம்மாணவி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் பாடைசாலைக்கு வந்த தந்தையும் அவரது நண்பரும் பாடசாலை வாசலில்...
இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகுவதுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கும் மது அருந்துவதே முக்கிய காரணம் என்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த முடிவு செய்து இருக்கின்றோம் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (04.10.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04.10.2023) இரவு 8.30 மணியளவில் பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி...
கொழும்பின் பல பகுதிகளை இலக்கு வைத்து எதிர்வரும் நாட்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என கிடைத்த தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது...
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகியமை தொடர்பாக யாழில் இன்று(04) மனித சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கலந்துகொண்டு...
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ”செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் இணையம் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.ugc.ac.lk ஊடாக சமர்ப்பிக்கலாம். 2022...
Loading posts...
All posts loaded
No more posts
