VIP அட்டையை அகற்ற மறந்த வடமாகாண சபை உறுப்பினர்

ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார்.

VIP-pass

அதன்போது, மிக முக்கிய நபர் என்பதை அடையாளப்படும் VIP அட்டையொன்று அவருக்கு வழங்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர், தனக்கு வழங்கப்பட்ட VIP அட்டையை தனது காரில் முன்புற கண்ணாடியில் ஒட்டினார்.

அதனையடுத்து, தனது குடும்பத்தினருடன சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தித்துவிட்டு ஊருக்கு திரும்பினார்.

இந்நிலையில், அவர் தனது காரில் ஒட்டிய VIP அட்டையை அகற்ற மறந்துவிட்டார் போலும்.

அன்று ஒட்டப்பட்ட VIP அட்டை இன்றும் அவரது காரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts