Ad Widget

Techstars அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend Jafffna நிகழ்வு!

Techstars அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend Jafffna நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் 2வது தடவையாக எதிர்வரும் 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை கோப்பாயில் அமைந்துள்ள சக்தி ஓய்வு விடுதியில் நடைபெற உள்ளது. இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ச்சியாக 5 நிகழ்வுகள் கொழும்பு , கிளிநொச்சி , நீர்கொழும்பு, திருகோணமலை ஆகிய நகரங்களில் நடைபெற்றது. 6வது நிகழ்வு தற்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

நடைபெறும் இடம்
http://www.sakthihome.com/contact/

இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ள கேள்வி பதில் விளக்கம் வருமாறு.

Startup என்றால்?

புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுத்தல்

Startup Weekend என்பது?

Techstars அமைப்பினால் மூன்று நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு

யார் இந்த Techstar ?

Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுவதற்கு உதவுதல், அவர்களுக்குத் தேவையான வசதிகள், வல்லுநர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல், Startupகளினை மேலும் அபிவிருத்தி செய்தல், முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகள்.

Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் ?

முதலாம் நாள் (மாலை 6.30மணி தொடக்கம் – இரவு 10மணி வரை)

கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த மொழியில் கருத்திட்டங்களை முன்மொழியலாம்.

அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய சிறந்த Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுக்களில் இணைந்துகொள்ளும் வாய்பினைப் பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் உரிய உதவிகளை வழங்குவார்கள்

இரண்டாம் நாள் (காலை 9 மணி தொடக்கம் – இரவு 10 மணி வரை)

ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது, அபிவிருத்தி செய்வது, செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களைத் தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்த மாதிரியைத் தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர் 3ம் நாள் மாலை வரை அது தொடரும். வளவாளர்களால் அளிக்கைகள் செப்பனிடடப்படும்.

மூன்றாம் நாள் மாலை (காலை 9 மணி தொடக்கம் – இரவு 9 மணி வரை)

அனைத்து குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் அளிக்கை (Presentation) வழங்குவார்கள். இவர்களில் 3 குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும். மேலதிக உதவிகள் Techstarஇனால் வழங்கப்படும். விருது பெறும் Startupகள் Startup Acceleration திட்டத்துக்கு தகுதிபெறும். ஏனையவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இம்முறை சிறந்த சமூகநலன் சார்ந்த கருத்திட்டத்திற்கு 10 ,000 ரூபா பெறுமதியான பணப்பரிசில் ஒன்றும் வழங்கப்பட உள்ளது.

யார் கலந்துகொள்கின்றார்கள்?

இலங்கையின் சகல பாகங்களில் இருந்து வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர், ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர், தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் 50 பேர் வரையில் கலந்துகொள்வர்.முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் மூன்று தொழில் முனைவோர் வல்லுநர்களின் பேச்சுக்களும் இடம்பெறும் .

நீ்ங்களும் கலந்து கொள்ளலாமா?

ஆம். புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா? அதற்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா? ஏற்கெனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லாவிடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில், ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேணடாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே.

கலந்து கொள்ள கட்டணம் உண்டா?

நிச்சயமாக கட்டணம் உண்டு. மூன்று நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டிகள், மதிய, இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கொண்டு கட்டணம் உண்டு மாணவர்களுக்கு 1500 ரூபாவும் ஏனையவர்களுக்கு 3000 ரூபாவும் அறவிடப்படும். தங்குமிட வசதி தேவைப்படுபவர்கள் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர். கட்டணம் செலுத்துவதில் வசதியீனம் உள்ள மாணவர்களும் ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு கிடைக்கக்கூடிய அனுசரணைகளை பெற்றுக்கொள்ளலாம்.

பங்குபற்றுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

 1. Startup ஒன்றினை ஆரம்பிக்க சந்தர்ப்பம்.
 2. பல்வேறுதரப்பட்ட துறைசார்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்
 3. தொழில்முனைவோருடையான தொடர்புகள்
 4. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு
 5. உலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்
 6. முன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்
 7. கூகிள் நிறுவனம் உள்ளிட்ட அனுசரணை நிறுவனங்களின் இலவச சலுகைகள்
 8. வெற்றி பெறும் அணிக்கு Techstars நிறுவனத்தின் பிராந்திய போட்டியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்
 9. சமூக நோக்குடனான சிறந்த ஒரு Startup இற்கு 10 000 பணப்பரிசில்
 10. .lk டொமைன் முகவரி மற்றும் Basic Hosting இலவசம்
 11. 3 நாட்களும் இணைய வசதி வழங்கப்படும்

இந்நிகழ்வுக்கு இலங்கை தகவல் தொடழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) , வடக்கு தகவல் தொழில்நுட்ப அமையம் (NCIT)  ஆகியனவும் வேறு வணிக நிறுவனங்களும் அனுசரணைகளை வழங்குகின்றன.

மேலதிக விபரங்களை
http://go.startupweekend.org/Jaffna
முகவரியில் காணலாம்

ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ள 0777 563 213 / 0777 563 144 / 0772244192 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

முன்பதிவு அவசியம் ஒதுக்கீடுகளாக 20 இடங்களே உள்ளன. முதலில் பதிவு செய்பவர்களுக்கே நுழைவு உறுதிசெய்யப்படும்.

முற்பதிவுகளுக்கு
https://goo.gl/forms/41M1Ur5NYMTpl02E2
என்ற முகவரியில் பதிவு செய்யவும்

Related Posts