யாழ். பல்கலையில் கட்டுமீறியது பாலியல் துன்புறுத்தல்கள்!!!; நேரில் வருவதாக உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, பகிடி வதைக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்திலும் இருந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. யாழ்ப்பாண...

பல்கலை பகிடிவதைக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்பு!!

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் கல்விப் புலத்தில் உயர் கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடருவது அவர்களின் வழமையான கற்றல் செயற்பாடுகளாக இருந்து வருகின்றது. இவற்றுக்கிடையில்...
Ad Widget

யாழ்.பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு மீள விண்ணப்பங்கோரத் திட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு, புதிதாகக் கோரப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கொழும்பைச் சேர்ந்த ஒருவரைத் துணைவேந்தராகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறியவருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களைப் பயன்படுத்தி துணைவேந்தர் பதவிக்கு முன்னைய பேரவைக் காலத்தில் கோரப்பட்ட விண்ணப்பத்தை வலுவற்றதாக்கி, புதிதாக விண்ணப்பங்களைக் கோருவதற்கான முன்மொழிவை...

கிளிநொச்சியில் இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (24) யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் #கிளிநொச்சி_பல்கலைக்கழக_வளாகத்திற்கு பயன்படுத்தப்படும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்...

பட்டபகலில் யாழ்.பல்கலை மாணவி காதலனால் கொலை!!!

யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில்...

பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆவது ஆண்டு நிறைவு: யாழ்.பல்கலையில் நிகழ்வு

பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 2001ஆம் ஆண்டு பொங்கு தமிழ் நடத்தப்பட்டது. இதன்போது, தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமென பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த...

தமிழமுதம் விழா யாழ்.பல்கலையில் ஆரம்பம்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்விழாவில் இவ்வருடம் “மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்” என்ற தொனிப் பொருளில் இடம்பெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நோக்கிய எழுச்சிப் பேரணியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழர் கலாசார –...

யாழ் பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த யதுர்சனா என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார். மல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை இவர் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து நேற்று மாலையே இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக...

யாழ்.பல்கலை. பழைய மாணவர்களுக்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தை மீளச் செயற்படுத்துவதற்கு பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. பழைய மாணவர் சங்கத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு விஞ்ஞான பீட பௌதீகவியல் விரிவுரை மண்டபத்தில் இடம்பெறும் என்று ஒன்றிம் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

சிறப்புத் தேவையுடைய சிறார்களின் வளர்ச்சிக்கு யாழ். பல்கலை. மாணவர்கள் வாகனங்களைச் சுத்திகரித்து நிதி சேகரிப்பு!!

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்குவதற்கு நிதி திரட்டும் நோக்குடன் , யாழ்.பல்கலை கழக முகாமைத்துவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் CAR WASH நிகழ்வு நடைபெற்றது. யாழ்.பல்கலை கழக முன்றலில் நேற்று காலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு பல்கலைகழக சமூகம் , மாணவர்கள் , பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவுகளை நல்கி இருந்தனர்.

யாழ். பல்கலை பதற்றம்: பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை- மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதனாலேயே அத்துமீறி உள் நுழைந்ததாகப் பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா நாளை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 11 அமர்வுகளாக 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. இதன்போது கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம், மருத்துவ...

சூரிய கிரகணத்தை அவதானிக்க யாழில் சிறப்பு முகாம்கள்!

வட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளது. சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்குநோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆகியவற்றுடன்...

தடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியிருந்ததுடன், பல்கலைக்கழக வளாகத்திற்குள்...

யாழ்.பல்கலை. வளாகத்துக்குள்ளிலிருந்து அனைவரையும் வெளியேற உத்தரவு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பிற்பகல் 2 மணியுடன் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது. அனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும் மீறி ஏற்கனவே ஏற்பாடு செய்ததற்கு அமைய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்....

தடையை மீறி யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!!

தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மாணவர்கள் உணர்வூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை...

மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை!

அனைத்துபீட மாணவர்களுக்கும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய பல்கலைக நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எந்த ஒரு நிகழ்வையும்...

பிரபாகரனின் பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழை். பல்கலை மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65ஆவது பிறந்த தினம் இன்றென்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைகளில் சகல நியமனங்களையும் இடைநிறுத்த உத்தரவு!!!

இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் நேற்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் திறைசேரிச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து ஆள்சேர்ப்புப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி...

தமிழ் கட்சிகளை கடுமையாகச் சாடும் யாழ்.பல்கலை மாணவர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன என குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts