Ad Widget

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதுவும் செய்ய முடியாது : சுவாமிநாதன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் கீழ் அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்த அமைச்சர், நீதி அமைச்சே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். அநுராதபுரம் சிறைச்சாலையில்...

அரசியல்வாதிகள் அரசியலுக்காக நடத்தும் உண்ணாவிரதம் போல அல்லாமல் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல் என் 15 வயது மகனை மேசன் தொழிலாளி ஆக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள். என் மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து...
Ad Widget

ஐநா குழு தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தது!

இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் நேற்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்ட நடைமுறையில் மனித உரிமை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டறிவதற்காகவே...

தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது பாதுகாப்பு, தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டி – தும்பர போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அடங்கிய குழுவினர்...

அரசியல் கைதிகளை விடுதலை செய்யமுடியாவிட்டால் கூட்டமைப்பினருக்கு தோல்வி!

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்காவிட்டால், அது அரசியல் தோல்வியாகவே அமையும் என்பதே அரசியல் கைதிகளின் கருத்து என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் கூறியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகஸின்...

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளின் விபரங்களை கோரி கடிதம்

அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் வழக்கு தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளின் விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரிக்கை...

அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற விரைவில் நடவடிக்கை: நீதியமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தின்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தை:மாவை

அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். யாழ்.சிறைச்சாலையில்...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில்!

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு...

தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டம்

தமிழர் தாயகத்தில் காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறும் தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் அரசியல் கைதிகள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கூட்டமைப்பிடம் கோரிக்கை

பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வடமராட்சியில் நாளை கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிற்கும் தேசிய அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நாளை (சனிக்கிழமை) வடமராட்சியில் கையெழுத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான யாழ்ப்பாணத்தின் இணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த கையெழுத்து போராட்டமானது,...

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் : டி.எம். சுவாமிநாதன்

கருணா , பத்மநாதன் போன்றோர் சுதந்திரமாக நடமாடும்போது சிறு குற்றம் புரிந்த அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் என்று நாம் சிபார்சு செய்துள்ளோம் என்று மீள்குடியமர்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். இது குறித்து மீள்குடியமர்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்....

வடக்கு முதலமைச்சரின் கோரிக்கையால் கைவிடப்பட்டது அரசியல் கைதிகளின் போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் இன்று காலை ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடமாகாண...

ஏழாவது நாளாகவும் தொடர்கிறது தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரது உண்ணாவிரத போராட்டம் ஏழாவது நாளா இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரும் கடந்த 21ஆம் திகதி தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் அரசியல் கைதிகள்...

அனுராதபுரச் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்க் கைதி ஒருவர் போகம்பரை சிறைக்கு மாற்றப்பட்டார்!

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கண்டி நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் குறித்த தமிழ் அரசியல் கைதி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய 16 கைதிகளும் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களது விடுதலையை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது...

உண்ணாவிரதமிருக்கும் அரசியற் கைதிகள் கோருவது விடுதலையை அல்ல-தவராசா

அனுராதபுரம் சிறையில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகளை நேற்று (23) வெள்ளிக் கிழமை பிற்பகல் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா நேரில் சென்று சந்தித்த போது ´நாங்கள் கோருவது, உடனடி விடுதலையை அல்ல, எமக்கான துரித நீதியையும் , எமக்கு விளங்கக் கூடிய மொழியிலான நீதி நடவடிக்கைகளையுமே´...

அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் முதல் கட்டமாக அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 தமிழ் அரசியல் கைதிகளே சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நேற்ற முன்தினம் 21 ஆம் திகதி...

புனர்வாழ்விற்கு தகமையுள்ள 23 அரசியற் கைதிகளின் பெயர்கள் வெளியீடு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 96 சந்தேகநபர்களில் 23 பேருக்கு இவ்வாறு புனர்வாழ்வு பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு...
Loading posts...

All posts loaded

No more posts