வடமேல், மத்திய மாகாண சபைகள் இன்று கலைப்பு!

gov_logவடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு மாகாண சபைகளையும் கலைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக் கடிதங்களை இரு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள், மாகாண ஆளுநர்களிடம் கையளித்திருப்பதைத்தொடர்ந்து இன்று இந்த மாகாண சபைகளைக் கலைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 அல்லது 28ஆம் திகதிகளில் நடத்த தேர்தல்கள் செயலகம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.