- Saturday
- April 4th, 2026
ரஷ்யாவின் மற்ற ஏவுகணைகளை, உக்ரைன் இராணுவம் சுட்டுவீழ்த்தி வரும் நிலையில், 'பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்' ஏவுகணையை மட்டும் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த, 20ஆம் திகதி ஒடெசா நகரம் மீது, ரஷ்யா இராணுவம், காலிபர், இஸ்கந்தர், பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. காலிபர், இஸ்காந்தர் ஏவுகணைகளை...
மாஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியிருப்பதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், ரஷ்ய தற்காப்பு அமைச்சின் கட்டடங்களிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சிதைவுகள் காணப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு ஆளில்லான வானூர்திகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின்...
உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பழைமையான தேவாலயம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. இந்த நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 போ் காயமடைந்துள்ளனர். நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் ஏவுகணை தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது....
உக்ரைன் நகரங்களான ஒடிஷா மற்றும் கீவ் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை ரஷ்யா 18.07.2023 நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலக தலைவரால் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலில் ஒடிஷாவிலுள்ள உணவு தானியக் கிடங்குகளில் தீப்பற்றியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்புவீரர்கள் போராடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. உக்ரைன் ஜனாதிபதி அலுவலக தலைவரான Andriy Yermak, இந்த...
வாக்னர் கூலிப்படையினர் தமது சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடின் அரசாங்கத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காத சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் மாஸ்கோவை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் கூலிப்படையினர் பயன்படுத்திய அதே பாதையில் தற்போது சடலங்கள் மீட்கபட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் துப்பாக்கியால்...
உக்ரைனுடனான ரஷ்ய போரை நிறுத்துவதற்காக புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான ரஷ்ய போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஜேர்மன் வெளியுறவு அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,“பேச்சுவார்த்தைக்கு அடிப்படையே இல்லை. பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்தான். ஆனால்...
உக்ரைனை தாக்கி அழிக்கும் அளவிற்கு ரஷ்யாவில் கிளஸ்டர் குண்டுகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சியொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளை ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தினால், ரஷ்யாவுக்கு சொந்தமான கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்த ரஷ்யாவுக்கு உரிமை உண்டு...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய 20 ஈரானிய ட்ரோன்களே இவ்வாறு உக்ரைன் விமானப்படையினால் இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது மேலும் இரண்டு...
ரஷ்யா- உக்ரைன் போரில் நேட்டோ மீதான உக்ரைனின் ஒற்றுமைத்தன்மை குறைந்துவிடும் என புடின் நினைத்தது தவறானது என பைடன் தெரிவித்துள்ளார். லிதுவேனியாவின்- வில்னியஸ் நகரில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,"போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் நேட்டோ மற்றும் உக்ரைனுக்கு இடையிலான உறவு நீங்கி விடும் என ரஷ்யா ஜனாதிபதி...
உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய கடற்படை தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவரே வெளியில் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஸ்டானிஸ்லா கொலை தொடர்பில் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரை தேடிவருவதாக ரஷ்ய...
வாக்னர் கூலிப்படைத் தலைவரை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம் 29ஆம் திகதி, புடின், வாக்னர் கூலிப்படைத் தலைவரான பிரிகோஜினை சந்தித்ததாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்...
உக்ரைனின் துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரால் 5,900 அடி தொலைவில் இருந்து ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் பேய் படையின் ஆல்ஃபா என அறியப்படும் உக்ரைன் துப்பாக்கி வீரர் ஒருவரால் பக்மூத் நகரத்தில் வைத்து ரஷ்ய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ஃபாவால் 5,900 அடி தொலைவில் இருந்து கொல்லப்பட்டவர் பிராந்திய படைகளின் துணைத்தளபதி எனவும்...
ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக் பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் 4700 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வுகள் அப்பிரதேசங்களில் நிலச்சரிவு அபாய நிலைமையை அதிகரித்துள்ளதாக அரச நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. அதிகரித்த நில அதிர்வுகள் மற்றும் எரிமலை சாம்பல் ஆகியவை எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அபாய நிலைமையை...
ரஷ்ய அதிபர் புடினை காண முடியாமல் கதறியழுத சிறுமியை, அதிபர் மாளிகைக்கு வரவழைத்து புடின் விருந்தளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள (Dagestan) தாகெஸ்தான் குடியரசுக்கு அதிபர் புடின் சுற்றுப்பயணம் சென்ற போது, அவரை பார்க்க 8 வயது சிறுமி (Raisat Akipova) ரைசாட் அகிபோவா வருகை தந்துள்ளார். இருப்பினும், கடும்...
ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய அணு ஆயுதக்கட்டுப்பாட்டு விமானம் நேட்டோ எல்லைக்கருகே பறந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விமானம், நேட்டோ எல்லைக்கருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ சார்பில் எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இரண்டு சீறிப்பறந்து இந்த ரஷ்ய...
ரஷ்ய தலைநகா் மொஸ்கோவில் உக்ரைன் இராணுவம் நடத்திய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலை ரஷ்ய இராணுவம் முறியடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "மொஸ்கோவை நோக்கி நேற்றைய தினம்(04.06.2023) உக்ரைனின் 5 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன. அவற்றில் 4 விமானங்களை ரஷ்யாவின்...
ரஷ்ய படைகளிடமிருந்து 37 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கன்னா மல்யார் இதனை தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை கொண்டு நடத்திய எதிர்தாக்குதல் மூலமாக, கடந்த வாரத்தில் 37 சதுர கிலோமீட்டர் நிலத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளார். இதற்கயைம, மெலிடோபோல் மற்றும் பெர்டியன்ஸ்க்...
வாக்னர் கூலிப்படைத்தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய இராணுவ தலைவர்களை கடத்த திட்டமிட்டிருந்ததாக இரகசிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த இரகசிய சதித்திட்டத்தை பாதுகாப்புப்படையினர் முடக்கிவிட்டார்கள் எனவும், இதனால் திட்டமிட்டிருந்த கிளர்ச்சியை முன்னெடுக்கும் நிலைக்கு யெவ்ஜெனி பிரிகோஜின் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. வாக்னர் கூலிப்படையின் தலைவர் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோரை...
உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த கப்பலின் பெயர் Icon of the Seas, 365 மீட்டர் (சுமார் 1,200 அடி) நீளமும் 2,50,800 டன் எடையும் கொண்டது. இந்த கப்பலில் உலகின் மிகப்பெரிய நீர் பூங்கா, 9 நீர்ச்சுழல்கள், 7 குளங்கள் மற்றும் உணவு மற்றும் பொழுதுபோக்கிற்காக நாற்பதுக்கும்...
உக்ரைனின் பக்முட் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சண்டை தொடர்பான காட்சிகளை உக்ரைனின் 3வது தாக்குதல் படை வெளியிட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளையும் சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன், தற்போது...
Loading posts...
All posts loaded
No more posts
