- Tuesday
- July 21st, 2026
வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேரை பொலிஸ் சேவைக்குள் இணைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பொலிஸ் சேவைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 200 பேர் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும் ஆயிரத்து 400 பேர் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கும் 400 பெண்கள், பெண் பொலிஸ் கொஸ்தாபல்...
வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் இந்த திட்டத்தினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தேச திட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கான தகைமைகளை பூர்த்தி செய்தும் அது கிடைக்காத...
ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை...
புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 பட்டதாரி இளைஞர்களை வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கு வேலை வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இளைஞர்கள் 20 பேருக்கும் புனர்வாழ்வு திணைகளத்தால் புனர்வாழ்வுக்கு உட்பட்டுள்ளதாகவும், புதிய திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கோரியுள்ளதாகவும் அமைச்சரவைக்கு பத்திரம் முன்வைக்கப்பட்டது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உயர் கல்விக்கு உட்பட்டிருந்தாலும், 20 பட்டதாரிகளும் “சிவில் சமூகங்களால் தங்கள் தகுதிநிலை...
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பத்து பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, குறித்த பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்....
வேலையற்ற பட்டதாரிகளில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் நாடு பூராகவும் வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 800 பேருக்கான நியமனத்தில் வடக்கு மாகாணம் முழுமையாக ஆயிரத்து 905 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் 5 மாவட்டச் செயலகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியில் சேகரிக்கப்பட்டு அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்ற நிலையில்...
வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக NVQ தகமை மட்டம் III அல்லது IV வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்று கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரம் (3000) இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி...
வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரத்து 117 தொண்டர் ஆசிரியர்களுக்கு வரும் 27ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்படவுள்ளது. அவர்களது பெயர் விவரங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பிரிவு வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு வரும் 27ம் திகதி 2 மணிக்கு இல.294, திருகோணமலையில் உட்துறைமுக...
இலங்கை பொலிஸ் சேவைக்கான பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பொலிஸ் சேவைக்கான ஆண், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் நாளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய பொலிஸ் பதவிக்கான விண்ணப்பங்கள், நாளை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்வைத்து ஏற்றுக்கொள்ளப்படும் என, யாழ் மாவட்ட...
நாட்டில் 22 ஆயிரம் பட்டதாரிகள் விரைவில் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் இதற்கான ஆட்களை இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்காக பனை...
வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 81 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (20) பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. 57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 15 கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் 9 விவசாய...
நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வடமாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் கௌரவ ஆளுநர்...
வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத்...
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பிரசாத் என்பவரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்.வேம்படி சந்தி, மத்திய...
அரச சேவைக்கு 20 ஆயிரம் பட்டதாரிகள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “இரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். எதிர்கால உலகிற்கு ஏற்ற வகையில் பட்டதாரிகளுக்கு தமது வல்லமையை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும். பட்டதாரிகளிடமிருந்து தேவையான சேவை கிடைக்காமை பெரும் பிரச்சினையாகும்” என்றும் பிரதமர்...
வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆசிரியர் சேவை வகுப்பு 03 இன் இரண்டாம் தரத்திற்கு இவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு மேல் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றியவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு...
பட்டதாரிகளுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு 8500 பட்டதாரிகளை இவ்வருடத்தில் ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்துள்ளமை குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கம் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 பேரை...
யாழ்.பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழில் நாடுவோர் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரையில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவட்ட செயலக தொழில்...
யாழ்ப்பண மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலையில்லாப் பிரச்சினை இரண்டு மடங்காய் உயர்ந்துள்ளது. புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படியே இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 5.7 சத வீதமாக இருந்த யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 2016 ஆம் ஆண்டு 7 சதவீதமாக அதிகரித்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் வேலையில்லாப் பிரச்சினை 10.7...
வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 194 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் நாளை ஞாயிற்றுக் கிழமை வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் பி.ப. 3 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணக் கல்வி...
Loading posts...
All posts loaded
No more posts
