- Monday
- September 14th, 2026
தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற மிஸ்டர் யுனிவர்ஸ் (Mr. Universe 2026) சர்வதேச உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக 12 பேர் கொண்ட இலங்கை உடற்கட்டமைப்பு அணி நேற்று (25) நாட்டை விட்டு புறப்பட்டது. இப்போட்டி ஜூன் 27 முதல் 29 வரை 40 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது....
2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி துருக்கி த்ரில் வெற்றியீட்டியுள்ளது. காலை 7.30 மணிக்கு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஒஸ்டன் ட்ரஸ்டி...
2026 பிஃபா உலகக் கிண்ணத்தின் 'குரூப் ஏ' பிரிவின் இறுதி லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த செக் குடியரசு அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்ஸிகோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் முதன்முறையாக தனது பிரிவில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வென்று (Perfect Group...
மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் 20-வது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்...
2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் 'K' பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய போர்த்துக்கல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டியின் 6-வது நிமிடத்திலேயே போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ...
மேற்கிந்திய தீவுகள் தேர்வு பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலகுவான வெற்றி இலக்கை எட்ட முடியாமல் துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை அணி 15 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற இந்த நான்கு நாள் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளான நேற்று...
15 வயதே ஆன இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அச்சமற்ற, நேர்த்தியான அதிரடி ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், வைபவ் வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்து 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக...
2026 பிஃபா உலகக் கிண்ணத் தொடரில் உருகுவே மற்றும் கபோ வெர்டே ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, 2 - 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றுள்ளது. இருமுறை உலக சேம்பியனான உருகுவே அணியில் பல அனுபவமிக்க வீரர்கள் இருந்த போதிலும், முதன்முறையாக உலக...
பிஃபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள ஜெர்மனி நாட்டு வீரர்கள், தற்போது ஆட்ட உத்திகள் மற்றும் எதிரணிகள் குறித்து மட்டுமன்றி, மற்றொரு விசித்திரமான பிரச்சினைக்கும் முகம் கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தின் வின்ஸ்டன்-சேலம் (Winston-Salem) பகுதியில் அமைந்துள்ள தங்களது பயிற்சி முகாமிற்கு அருகில் பாம்பு ஒன்று கண்டறியப்பட்டதை அடுத்தே...
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில், போர்த்துகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். காங்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் கண்டதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக வயதில் (41 ஆண்டுகள் மற்றும் 132 நாட்கள்) தொடக்க வீரராகக் (Outfield player) களம் இறங்கிய வீரர்...
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைதீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்படக்கங்களை தனதாக்கியுள்ளார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார்....
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. “யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்படும் இப்போட்டித் தொடரில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் சகல...
இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான பயிற்சி முகாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அதனை...
உலகக் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் நோர்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். எனினும் தமிழக வீரரான பிரக்ஞானந்தாவின் திறமைக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் உலகின் முதல் தர வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு சமநிலையில் (Draw)...
வடமராட்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நீச்சல் போட்டியொன்றில் 40 வயதான பெண்ணொருவர் வெற்றிவாகை சூடியுள்ளார். வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது. பருத்தித்துறை- தென்னியம்மன்முனையில் இருந்து இன்பசிட்டி வரை குறித்த நீச்சல் போட்டியானது இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் முதலாம் ,...
லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது லங்கா பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது....
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்' வல்வெட்டித்துறை பொலிகண்டி விளையாட்டு வீராங்கனைக்கு புதிய சம்மட்டி ஒன்றை கொட்டாவ விளையாட்டு விராங்கனை அன்பளிப்பு செய்து அன்பின் மகத்துவத்தை உணர்த்தும் இந்தத் திருக்குறளை மெய்ப்பித்துள்ளார். 16 வயது பாடசாலை மாணவி ஒருவரின் இரக்கக் குணம் கொண்ட இந்த செயல் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது....
தியகமவில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றெடுத்த ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், குண்டெறிதல் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இந்த இரண்டு தங்கப் பதக்கங்களையும் திங்கட்கிழமை (08) சில மணித்தியாலங்கள் இடைவெளியில் மிதுன்ராஜ் வென்றெடுத்தமை விசேட...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும்,...
யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் தடைசெய்யப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அப்படியான நிலைமை உருவாகினால், அடுத்த சில வருடங்களிற்கு யாழ் உதைபந்தாட்ட லீக்கிற்கு உட்பட்ட 33 கழகங்களும், எண்ணற்ற விளையாட்டு வீரர்களும் இருண்ட உதைபந்தாட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள நேரிடும். கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்களையடுத்தே, இந்த விபரீதமான நிலைமை உருவாகியுள்ளது. கடந்த...
Loading posts...
All posts loaded
No more posts
