- Monday
- June 29th, 2026
நீங்கள் அனைவரும் சொந்த மண்ணில் பிறந்து வளரவில்லை. என்பதை உங்கள் முகங்களில் பார்கிறேன் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் தெரிவித்தார். வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொகுதி காலணிகளை பிரிட்டன் அமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,...
இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத்தருமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் சுன்னாகம் நலன்புரி நிலைய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலி.வடக்கு மற்றும் சம்பூர் பகுதிகளில் இராணுவம் குடியிருக்காத இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய அல்லது அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய மக்களுக்கு சொந்தமான காணிகளை அடுத்த ஒருவார காலத்திற்குள் அரசு முதல் கட்டமாக மக்களிடம் கையளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம் தொடர்பில்...
வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலி.வடக்கு மக்களை இன்றைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில்...
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பொதுமக்களுடன் திங்கட்கிழமை (26) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு சென்ற விஜயகலா, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன்...
உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திங்கட்கிழமை (26) தெரிவித்தார். மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்றதா? என்று அவரிடம் வினாவியபோதே, அவரிடம் இவ்வாறு தெரிவித்தார்....
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முகப்பு பகுதியில் மீண்டும் இராணுவக் குடியிருப்பு என அடையாளப்படுத்தும் பெயர் பலகையால் வலி,வடக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த பெயர் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அகற்றப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு...
யுத்தத்தால் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்களையும் இலங்கையில் நலன்புரி முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் உள்ள 7840 குடும்பங்களுக்கு உட்பட்ட 26056 பேர் உள்ளார்கள் அவர்களை...
பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆனைக்கோட்டை கூழாவியடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது. தனியாருக்கு சொந்தமான காணியில் இலங்கை இராணுவத்தின் 11ஆவது சிங்க ரெஜிமென் படைமுகாம் அமைந்துள்ளது. இந்தக் காணியினை இராணுவத்துக்கு...
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)
இராணுவத் தேவைகளுக்கான யாழ்ப்பாணத்தில் சுவீகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை அளவிடுமாறு நில அளவைத் திணைக்களத்திற்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை பராமரிப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சிடம் 11 மில்லியன் ரூபாய் நிதியுதவி கோரியிருந்த நிலையில், (more…)
தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்று கோரி வலி.வடக்கு மக்கள் மகஜர் ஒன்றினை யாழ். மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கி. கருணாகரனிடம் கையளித்துள்ளனர். (more…)
வலி.வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சபாபதி நலன்புரி முகாமில் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றினை இன்று மேற்கொள்ள உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். (more…)
வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.ஜோன் ரங்கினிடம், நேற்று செவ்வாய்க்கிழமை (02) கையளிக்கப்பட்டது. (more…)
இராணுவத்தினர் அனுமதியின்றி எங்கள் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றபோது, நாங்கள் ஏன் அரச காணியில் அத்துமீறிக் குடியமரக் கூடாது. (more…)
வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள். (more…)
அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. (more…)
வலி.வடக்கு பிரதேச சபையின் முழுமையான ஒத்துழைப்புடன் கீரிமலையில் உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியில் உள்ள காணிகளை காணி உரிமையாளர்கள் துப்புரவு பணியை மேற்கொள்ளச் சென்றபோது (more…)
Loading posts...
All posts loaded
No more posts
