- Monday
- June 29th, 2026
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பினால் இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடக்கு மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது அம்மக்களை தொடர்ச்சியாக 25 வருடங்கள் மிகுந்த...
கீரிமலையில் அமைந்திருந்த சிறிய கடற்படை முகாம் இன்று பகல் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த வீடுகளும் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கீரிமலை கேணிக்கு அண்மையாக மூன்று வீடுகளில் கடற்படையினர் நிலைகொண்டு இருந்தார்கள். இதில் ஒரு வீடு ஏற்கனவே உரியரே்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் மிகுதியாகவுள்ள இரண்டு வீடுகளிலும் கடற்படையினர் தங்கி இருந்தார்கள். இன்று திங்கட்கிழமை குறிப்பிட்ட இடத்தில்...
கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள தகுதியிருந்தும் வீடுகள் கிடைக்காத தனி நபர் மற்றும் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்டோரின் விவரங்களை பிரதேச செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் மிகவும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடும்...
இன்னும் விடுவிக்கப்படாத பொது மக்களின் காணிகளை விடுவிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ள பொதுமக்களின் 615 ஏக்கர் காணிகளை மீண்டும் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளமை...
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்களை, நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வந்து பார்வையிடவேண்டும் என நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் சார்பாக இடம்பெயர்ந்த மக்கள் பிரதிநிதியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட...
எம்மை விரைவில் மீள்குடியேற்றம் செய்யாவிடின். ஒரு கையில் எமது காணிக்கான உறுதியுடனும், மறுகையில் வெள்ளைக் கொடியையும் தாங்கி உயர்பாதுகாப்பு வலய வேலிகளைத் தாண்டிய எமது சொந்த நிலங்களுக்குச் சென்று குடியமருவோம் என வலிகாமம் வடக்கில் இருந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள்...
வடக்கில் ஒரு சிறு துண்டு நிலத்தையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கவில்லையெனவும், இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் என இராணுவப் பேச்சாளர், தென்னிலங்கை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஜெனீவா சென்று பொய் கூறும் போது, அந்த இராணுவ ஊடக பேச்சாளர் பொய் கூறியது...
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் யாழ்பபாணத்தில் தொடர்ந்தும் முகாம்களில் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள 32 முகாம்களில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4737 பேர் முகாம்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத்...
யாழ்.மாவட்ட நலன்புரி நிலையங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் நிலையியற் கட்டளை 23/2 நேற்றைய தினம் எழுப்பிய வினா யாழ்.மாவட்டத்தில் 32 நலன்புரி நிலையங்களில் 1318 குடும்பங்களில் 4737 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களுடைய அடிப்படைத் தேவைகள் தொடர்பில் உரிய தரப்பினர் காலத்திற்குக்காலம் தேவையான நடவடிக்கைகளை போதியளவு எடுக்கவில்லையென்பதனை அறியத்தருவதுடன், யாழ்மாவட்டத்தில் யுத்தம்...
யாழ்.குடாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வலிகாமம் வடக்கு, மயிலிட்டி துறைமுகத்தை வளலாய் பகுதியில் அமைப்பது தொடர்பான பாதுகாப்புத் தரப்பினரின் யோசனையை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா அவரகள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,...
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட...
இந்த வருடம் மார்கழி மாதத்திற்குள் வளலாய் பகுதி மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முயற்சிகள் எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதியளித்தார் இன்றைய தினம் மீள்குடியேற்றப்பட்ட. வளலாய் பகுதி மக்களை எதிர்க்கட்சித்தலைவர் சந்தித்து பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு கெட்டகாலம் போய் நல்ல காலம் மலர்ந்துள்ளது.முதலில் முழுமையான...
வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கதைத்து திடமான முடிவு எடுக்கப்படுமென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வலி.வடக்கு வசாவிளான் ஒட்டகபுலம் காணி விடுவிப்பு குறித்த கூட்டம் வசாவிளான் மாதா கோவில் நடைபெற்றது. அங்கு விஜயம் மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார். இந்த காணியை மீண்டும் மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால், குறித்த போராட்டம் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது. இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும்,...
யாழ்.மாவட்டத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் ஆயிரத்து 150 சிறுவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இன்றுவரை தமது கல்வியை தொடர்ந்து வருவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து 26 வருடங்களாக நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுவும் இன்றி தமிழ்க் குடும்பங்கள்...
வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,37,529 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நவீன துரித வீட்டுத் திட்டக் கட்டுமானப் பணிகளுக்கான ஆர்வலர்களிடமிருந்து திட்டக்கோரலுக்கான பத்திரங்களை நிதியிடல் வசதியுடன் பெற்றுக் கொள்ள புனர் வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு...
வலி வடக்கின் மீள் குடியேற்றம் மிகவிரைவில் இடம்பெறும் என, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவின் பணிப்பாளர் நாயகம் மாளியக்க தெரிவித்ததாக, வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கான மீள்குடியேற்றத் தலைவர் தனபாலசிங்கம் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். அப் பகுதியில் காணப்படும் துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதுறைகள் என்பன மிகவிரைவில் விடுவிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார். வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கு...
இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் தாங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மயிலிட்டி மக்கள், இன்று செவ்வாய்க்கிழமை மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் தமது பகுதி விடுவிக்கப்பட்டு, தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளலாம் எனவும், இடம்பெயர்ந்நது தாங்கள்...
வலிகாமம் வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலி, வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு...
இன்னும் இரண்டு மாத காலத்தில் அவகாசத்தில் படிப்படியாக மீள்குடியேற்ற விடயத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாகவும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இந்து மத அலுவல்கள் அமைச்சர் .எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். புதிய அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் முதல் தடைவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
