- Tuesday
- June 30th, 2026
தேசிய பொங்கல் விழா இடம்பெற்ற ஆலயம் அமைந்துள்ள பலாலி பகுதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களின் இருப்பிடங்கள் என்பதால் இதனை நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூறவே தேசிய பொங்கல் விழா வழிபாட்டில் கலந்துகொண்டேன் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது ஜனாதிபதி பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதியை படைமுகாம்கள் அற்ற பகுதியாகக் காட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா என பொதுமக்கள்...
வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட மயிலிட்டி இறங்குதுறையில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வர்த்தகர்கள் கடற்படையினரின் உதவியுடன் பொருட்களை இறக்குமதி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த இறங்குதுறை காணப்படுதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் மயிலிட்டி பகுதியைச்...
எதிர்வரும் 15ஆம் திகதி பொங்கல் தினத்துக்கு முன்னதாக 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (11) மாலை நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
அண்மையில் யாழ் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தயாராகவுள்ள என இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் Thorbjørn Gaustadsæther தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப்பிரதிநிதி ஜோர்ன் சொரேன்சென் (Joern Soerensen) க்கும் தூதுவருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த புரிந்துணர்வு...
வலிவடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதிகளில் வெடிப்பொருட்கள் இருப்பதற்கான அபாய எச்சரிக்கை காணப்படுவதால் மக்கள் குடியேறுவதில் அச்சம் வெளியிடுகின்றனர். அத்துடன் இராணுவத்தினர் அமைத்திருந்த பதுங்கு குழிகள் மற்றும் மண் மூட்டைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பு அரண்கள் போன்றனவும் அகற்றப்படாமல் இருப்பதால் அவற்றிலும் வெடி பொருட்களின் அபாயம் இருக்கலாம் என கருதி...
தங்கள் வீடுகள் 1987ஆம் ஆண்டு இருந்தமையும், தற்போது இருந்த இடமே இல்லாமல் அழிக்கப்பட்டதையும், வலிகாமம் வடக்கு மக்கள் புகைப்பட ஆதாரத்துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் காட்டினர். உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதிகளை முதலமைச்சர், வியாழக்கிழமை (07) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போதே மக்கள்...
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் பொதுமக்களின் ஏழாயிரம் ஏக்கர் நிலம் படையினர் வசம் இன்னும் உள்ளது என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் அதை சிறிது சிறிதாக அந்த நிலங்களை தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில் விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் கூறுகிறார். அண்மைக்...
தெல்லிப்பழை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 5840 ஏக்கர் காணியில் 984 ஏக்கர் காணியை விடுவித்து 2050 குடும்பங்களை அங்கு மீள்குடியேற்ற இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்- நல்லிணக்கம் மற்றும்...
உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினர் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை வரைபடங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. வலி.வடக்குப் பிரதேசத்தில் 700 ஏக்கர் நிலப்பரப்பு அண்மையில் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் வீமன்காமத்தில் இராணுவ முகாம் இருந்த நிலமும் அடக்கம். இந்தப் பகுதிக்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கான தலைமை முகாமாக செயற்பட்டிருக்கலாம்...
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு அதிகமாக இருந்தாலும் முதல் கட்டமாக இதை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது என மீள்குடியேற்றத்துறை துணை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். அந்தப்...
இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தலைமையில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளனர். தேசிய பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம்...
நாட்டில் இடம்பெற்ற போர் பாதிப்புக்களில் சிக்குண்டு முகாம்களில் வாழ்கின்ற 10 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வீடுகளை கட்டுவதற்கான நிலங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு - கிழக்கில் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவு நிலங்களை மக்களிடம் மீள ஒப்படைப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். தென்பகுதி ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி நேற்று வழங்கிய பேட்டியிலேயே...
வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் பொதுமக்களுக்குச் சொந்தமான 5 ஆயிரத்து 710 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். 'வலிகாமம் வடக்கில் 5 ஆயிரத்து 500 ஏக்கர்களும் வலிகாமம் கிழக்கில் 210 ஏக்கர்களும் இவ்வாறு விடுவிக்கப்படவேண்டும். விடுவிக்கப்படாத காணிகளில்...
வடக்கு, கிழக்கில் 11 000 வீடுகள் அமைக்கப்பட்டு 32 முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு 6 மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். விரைவில் செய்து முடிக்க வேண்டிய பல கட மைகள் எமக்கு உள்ளன. அவற்றில் பிரதானமாக வடகிழக்கு மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு சிறந்த...
பலாலி கன்னார் வயல் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் தின விழாவில் பங்கேற்கவுள்ள மக்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவிலும் இந்துக் கோயில்கள் மற்றும் மீள்குடியேற்ற சபையும் அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழா பலாலி கன்னார் வயல் ஸ்ரீ...
வலி.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துகென அரசினால் விடுவிக்கப்பட்டமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. காணி விடுவிக்கப்பட்டமையை வரவேற்று அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வலி.வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை தமிழ்த்...
இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் சில இடங்களில் மிதிவெடி அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும் வலிகாமம் கிழக்கு வளலாய் பகுதியில் 233 ஏக்கர் காணிகளும் இராணுவத்தினரால் செவ்வாய்க்கிழமை (29) திடீரென விடுவிக்கப்பட்டன. இதனையடுத்து, நேற்று புதன்கிழமை, மக்கள் மிக ஆர்வமாக அந்த இடங்களைப்...
வலி.வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமுமே இவ்வாறு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 25 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் நேரில் சென்று ஆவலுடன் பார்வையிட்டனர்....
Loading posts...
All posts loaded
No more posts



