- Wednesday
- August 13th, 2025

யாழில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்றைய தினம் உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார். இதன்போது அவருடன் சேர்ந்து வியாபாரத்தில்...

யாழ். மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் சத்திர சிகிச்சைகளுக்கான கண்வில்லைகளும், சத்திரசிகிச்சை...

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து , புத்தர் சிலைகளை...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மபிரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தொழிற்சாலைக்கு உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், தொழிற்சாலைக்கு அருகில்...

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கொலை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்ற...

யாழ் நகர்ப் பகுதியில், முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் நகர் பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் கட்டணமானி பொருத்தப்படாமையினால் மக்களிடம் அதிகளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகப்...

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என...

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது...

இந்திய இராணுவத்தினால் 63 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (02.08.2023) வல்வெட்டித்துறையில்அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தினால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,...

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள பனைக்காட்டில் நேற்று (01) ஏற்பட்ட தீயினால் சுமார் 2000 பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த பனை காட்டை அண்டிய தனியார் பண்ணை ஒன்றின் தொழிலாளர்கள் குழுவொன்று தோட்டத்தின் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளதுடன் பனைக்காடு நோக்கி தீ பரவியதால் பனைக்காடு தீக்கிரையாகியுள்ளது. தீயினால் சேதமடைந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள்...

இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொருளாதார அபிவிருத்தி, அரசியல் தீர்வு உள்ளடங்கலாக சகல அம்சங்களையும் அமுல்படுத்jத வேண்டும் என்பதை இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர்...

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 23ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின் போது வீட்டுக்குள் புகுந்த 8 பேர், அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி, வீட்டிற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. அங்கு வீட்டில்...

கடல் நீர் உட்புகாத வகையில் வயல் வெளிகளை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மண்ணை வெட்டி எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களில் ஒரு வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அராலி பகுதியில் கடற்கரையை...

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது...

”தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுப் பயண செயற்பாட்டின்” 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று யாழில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், இடம்பெற்ற இப் போராட்டமானது யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக...

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த தமிழக கடற்படையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு...

யாழ்ப்பாணம் என்பது சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி என தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார். தாவாடி அம்பலவான முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழா ( 29.07.2023) இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி. இலங்கை முழுவதுமே...

எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் ஏற்படலாம் என இலங்கை கனியவள கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. கனியவள மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். மேலும், நாடளாவிய ரீதியாக செயற்படும் எரிபொருள் நிலையங்கள் 50 சதவீதமான கையிருப்பினை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. இதில், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகுருமார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஹர்த்தாலுக்கு, வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து...

ல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆற்று நீரேரியில் 4 முதலைகளும் கொம்மந்தறை பகுதியில் உள்ள நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டுள்ளதாகத்...

All posts loaded
No more posts