அதிக ஹெரோயின் பாவனையினால் இளைஞன் பலி!!

யாழில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் கல்வியங்காட்டில் அவர் நேற்றைய தினம் உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார்.

இதன்போது அவருடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் அவரை விடுதிக்கு அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய, அதிக ஹெரோயின் பாவனையே குறித்த மரணத்திற்கு காரணம் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

Related Posts