- Saturday
- August 2nd, 2025

2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த...

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(10-10-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர் மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்....

வலிகாமம் மேற்கு சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் போது, அங்கு வந்த போதையில் இருந்தவர்கள்...

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை நாடளாவிய ரீதியில் இரண்டாயிர்தது 888 பரீட்சை மத்திய நிலையங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதி தரம்...

இந்தியா - இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை இன்று (10) ஆரம்பமாகவிருந்த நிலையில் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த...

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வவுனியா வெளிக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட் விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான...

வடக்கு,கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முஸ்லிம் தரப்பின் பூரண ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்த அழைப்பு விடுத்துள்ளதோடு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புக்களையும் கோரியுள்ளன. வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (09) யாழ்.தந்தை செல்வா அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு அரசியல் கட்சிகளின்...

யாழ்ப்பாணத்தில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் யாழப்பாணம் - ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் நேற்று (08.10.2023) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் அச்சுவேலி - தோப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதையுடைய கிட்டுனன் லோகநாதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (09) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த...

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி யாழ் நகரில் உள்ள வீதி வழியாக சென்று, இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக...

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு, சாதாரண தரப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்று காலை இந்தியா – நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட குறித்த கப்பல் பகல் 1.15 இக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த...

எதிர்காலத்தில் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும் என்றும் மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர்...

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றனர்....

திருநெல்வேலி பகுதியில் தவறான முடிவெடுத்து மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (08.10.2023) இடம்பெற்றுள்ளது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் நேற்றுமுன்தினம் (07) கோயிலுக்கு...

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ''நீதித்துறை மீது கை வைக்காதே'' என்னும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட...

கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 30 ஏக்கர் சந்திப்பதில் உள்ள வீடு ஒன்றின் மீது குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களுக்கு இடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை...

யாழில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் வேகமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கண் கடுமையாகச் சிவப்படைதல், கண்ணில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படுத்தல் இதன் அறிகுறிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

முல்லைத்தீவு நீதிபதியாக இருந்த சரவணராஜா தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் அது தொடர்பாக அவரே தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி குறிப்பில், ''நீதிபதி சரவணராஜாவிற்கு மொழிப்பிரச்சனை இருந்திருக்கும் கூறுகின்றார்''...

All posts loaded
No more posts