- Saturday
- July 19th, 2025

தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் ஏற்பட்ட தகராற்றில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (19) இரவு இராமநாதபுரம், கல்மடு நகரில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30...

கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பாக நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார்...

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் யாழ் பிராந்திய பாதுகாப்புப்படைத் தலைமையகக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (19) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உரிய வகையில் முன்னெடுத்து செல்லல், பொது மக்களின் நாளாந்த வாழ்வியல் செயற்பாடுகளின் போது...

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாளாந்த மின்சார தேவை 03 முதல் 04 மெகாவட் மணிநேரம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் நீர் மின் உற்பத்தி 20 வீதமாக குறைந்துள்ளதாகவும் நீர்மின் நிலையங்களின் நீர் கொள்ளளவு 83 வீதமாக இருப்பதால் நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் எனவும் மின்...

போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்த உயிர் நண்பனால் , இளைஞனின் உயிர் பிரிந்துள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் ,அவற்றில் இருந்து மீண்டு...

எதிர்வரும் வாரங்களில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்பகுதிக்கு விஜயம் செய்த போது,...

மன்னார் - தலை மன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் - தலை மன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி...

”தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தடை கோரி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் , சுமந்திரனின் ஆதரவாளர்களால் தொடரப்பட்டது...

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சிறீதரனின் இல்லத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து, ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். அத்துடன் ”நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம்...

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்திருந்தார்....

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இணுவில் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை வலியுறுத்தி வியாழக்கிழமை (15) புகையிரதத்தை மறித்து போராட்டமொன்றைப் பொதுமக்கள் முன்னெடுத்தனர். குறித்த புகையிரத கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்தும் கடவை காப்பாளர் அவ்விடத்தில் தமது கடமையைச் செய்யவில்லை என குறிப்பிட்டும் பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 6:45 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதத்தை...

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த அடையாளம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். வைத்தியசாலைக்கு மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதோடு இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளனர்....

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணங்களில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள பொது ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை முதல்பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும்...

அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த...

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கரட், பச்சை மிளகாய் மற்றும் உருளைகிழங்கு என்பன தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், கடந்த காலத்தில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்த...

யாழ்ப்பாணம் பலாலி கிழக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் , தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கடித பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் கொழும்பிலிருந்து...

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள...

வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்து, 500 ஏக்கர் அளவிலான காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் நேற்றையதினம் (12.02.2024) அதை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில், 500 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துத் தருமாறு விமான...

தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். பகல் வேளையில் குழந்தைகள் விளையாடும் போது அதற்கு உகந்த இடத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளை தண்ணீர்...

All posts loaded
No more posts