- Wednesday
- May 13th, 2026
எந்தவொரு வேளையிலும் பிரச்சினைகளை முன்வைக்க தன்னிடம் வரலாம் என்றும் அவற்றைத் தீர்த்து வைக்கத் தயார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சில் நேற்று (புதன்கிழமை) கடமைகளை ஆரம்பித்தார். தனது கடமைகளைப் பெறுப்பேற்ற பின்னர் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ்...
நாட்டின் பிரதமரை தெரிவு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முன்வைத்துள்ள இரு நிபந்தனைகளும் தமிழ் மக்களின் நலன்களை அழிக்கும் நிபந்தனைகள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில்...
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய காரணத்தையும் அவை தொடர்பாக ஜனாதிபதி என்ற வகையில் முன்னெடுத்த...
பிரதமர் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்...
யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய நுழைவாசலுக்கு அருகில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 19 வயதுடைய அபயரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே...
நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பதவியேற்றது. அதன்படி, நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
யாழ். பல்கலையில் நடைபெற்ற தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் யாழ். பல்கலைகழக மாணவர்களால் தமிழமுதம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. குறித்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் என பலரும் நிதியுதவி செய்ததாகவும் அதன்...
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாத்தறை முதல் திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் வரையிலான கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டல...
“தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை உருவாக்கும் பணியில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு ஈபிஆர்எல்எப் மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளையும் பேரவையிலிருந்து அகற்றவேண்டும்” என்று வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பேரவையின் வடக்கு இணைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது. இந்த தகவலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டார். யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்” என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது கீச்சகப் பக்கத்தில் சமந்தா பவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர், பொறுப்புக்கூறலுக்கு...
யாழ்.குடத்தனை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளுக்குள் புகுந்த தாக்குதலாளி ஒருவர் வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு இருந்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட...
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளராக வீ.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட 12 அமைச்சரவை அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமானது தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் ஏற்படுத்தாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பான்மைக் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்கு எவ்வாறான வாக்குறுதிகளையும் அவர்கள் வழங்குவார்கள்....
யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்துள்ளனர். வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனையடுத்து அங்கு சென்ற ஏற்பாட்டு குழு இளைஞர்களை, கடந்த வருடத்தைப்...
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் ஆட்சிமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா பெருமளவு நிதியைக் கொடுப்பதாக, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறிய குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. “இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. பொறுப்பற்றவை. ஒரு அயல் நட்பு நாடு என்ற வகையில், இலங்கையில் மாற்றங்களை...
நாட்டில் மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி, சகல கட்சிகளையும் தமமுடன் இணைந்துகொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசேடமாக அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார். அத்தோடு, நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூட்டப்படுமென நம்புவதாகவும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரு. மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின்படி இன்று அவரை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்....
அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிக்கவிழ்ப்பை முன்னெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கும் மெரும் மக்கள் போராட்டம் கொழும்பில் ஆரம்பமாகி நடைபெற்று வருகி்றது. அலரிமாளிகைக்கு அருகாமையில் ஆரம்பமாகிய இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். “ஜனநாயகத்தை பாதுகாப்போம் :...
எரிபொருள் விலைச் சூத்திரம் புதிய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்துக் கூறிய அவர், மக்கள் இனிமேல் 10ம் திகதி வரும் போது அச்சமடைய தேவையில்லை. 10ம் திகதி பேய் தினம். இனிமேல்...
நாடாளுமன்றத்தை வரும் வெள்ளிக்கிழமை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்ய, கட்சித் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை சபாநாயகர் இன்று நண்பகல் சந்தித்தார். இதன்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts
