- Tuesday
- July 15th, 2025

வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில்...

நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள்...

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது” குறித்த மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின்...

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் கைதி செ.ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனை நேற்று முன்தினம் (16) பார்வையிட்ட பின் கருத்து தெரிவித்த...

சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரும், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரும், வழக்கொன்றுக்காக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து , சாவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்....

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் (Department of Meteorology) கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல்...

சரியான திசை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கமே சாத்தியமான வழிமுறை என தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

வுனியா, வெடுக்குநாறிமலையில் கடந்த சிவராத்தி தினத்தன்று இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், மற்றும் ஆலயத்தின் செயலாளர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் செயலாளர் ”நாங்கள் தொல்லியல் இடங்களை சேதப்படுத்தியதாக...

வவுனியா பொது வைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர் குழு ஒன்று திங்கட்கிழமை (15) இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… திங்கட்கிழமை (15) இரவு 11மணியளவில் வைத்தியசாலையில் நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக இளைஞர்கள் குழு ஒன்று வருகைதந்துள்ளது. இதன்போது கடமையிலிருந்த காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையில்...

ரஷ்யா, உக்ரைனின் பிரதான மின் உற்பத்தி நிலையம் மீது மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் அதன் கட்டமைப்பு முற்றாக செயலிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் திகதி உக்ரைனின் டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தங்கியிருந்தது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100...

பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன சுரங்கப்பாதையும் ஜனாதிபதி...

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த தாயும் மகளும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்ற 37 வயதான...

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன்...

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து, கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகவும், சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரிடம் சுமார் இரண்டரை கோடி...

”தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டு...

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் வடக்கு,கிழக்கு அரசியல், சிவில் அமைப்புக்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலைப்புறக்கணிப்பதால் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 70ஆண்டுகளாக தென்னிலங்கை தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் வாக்களித்து வந்துள்ளபோதும் தற்போது வரையில் ஏமாற்றமே எஞ்சுவதாக உள்ளது....

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

யாழில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாக இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. குறித்த மோதல் சம்பவம் இன்று (15.4.2024) அதிகாலை 12.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற...

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்....

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென உடல்நல குறைப்பாடுகள் ஏற்பட்டு உடல் மெலிவு ஏற்பட்டது. அதனை அடுத்து மாணவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது , மாணவனுக்கு காச நோய் இருப்பது கண்டறியப்பட்டது....

All posts loaded
No more posts