வெளியூர் வர்த்தகர்களின் வியாபாரங்களுக்கு தடை விதிக்கக் கோருகிறது யாழ்.வணிகர் கழகம்!!!

பண்டிகைக் காலங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு யாழ்ப்பாண மாநகர் உள்பட வடக்கு மாகாணத்தில் அனுமதி வழங்க வேண்டாம் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர். ஜெயசேகரம், உள்ளூராட்சி சபைகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். தென்னிலங்கை வர்த்தகர்கள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதே போன்று வடபகுதி வர்த்தகர்கள் தென்னிலங்கையில் சென்று...

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில்

வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி...
Ad Widget

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பிரசாத் என்பவரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்.வேம்படி சந்தி, மத்திய...

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானது!

019ஆம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 5ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 22ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியிடம் கொழும்பு தமிழ் சங்கம் மன்னிப்பு கோரியது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்தவிருந்த தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்வுக்கு சங்க நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனையடுத்து தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவின் சட்டரீதியற்ற செயற்பாட்டினால் தந்தை செல்வாவின் நினைவுக் கூட்டம் இரத்தானது என கொழும்புத் தமிழ்ச் சங்கம், தமிழரசுக் கட்சியின் கொழும்புக்...

மன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன

மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மனித புதைகுழியானது சிறிய அளவில் அகலப்படுத்தப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக மூன்று மாத காலப்பகுதிக்கு மூடப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பேராசிரியர் ராஜ் சோம தேவவினால் மன்னார் மனித புதைகுழி...

பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடக்கைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் புத்தளத்தில் கைது!!

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் செல்லவிருந்த, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் புத்தளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பொலிஸார் நேற்றிரவு முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பயணித்த வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை:ஆளுநர் சுரேன் ராகவன்

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் வடக்கு மாகாணத்திலுள்ள மக்களின் வாழ்க்கையில் பாரியதொரு மாற்றம் இன்னும் ஏற்படாமல் இருக்கின்றதென வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லெவருடுக்கு (Eric LAVERTU) குறிப்பிட்டுள்ளார். ஆகையால், அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகளை மேற்கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் ஆளுநர் மேலும்...

யாழின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக ராஜித ஸ்ரீ தமிந்த, தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் ஆசியுடன் வைபவரீதியாக மாலை 3.50 மணியளவில் பிரதி பொலிஸ்மா அதிபர், தமது கடமைகளை...

15ஆம் திகதி விடுமுறை – அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய 15ஆம் திகதி விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கள மற்றும் இந்து மக்களால் சித்திரை புதுவருட பிறப்பு கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டே 15ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் கொலை செய்த நபர் கைது!!!

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் ஆண் ஒருவர் மீது பெட்ரோல் ஊத்தி தீயிட்டதில் அவர் தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்துடன் தீயிட்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது இதில் கண்ணகிபுரத்தை சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே உயிரிழந்துள்ளார் விநாயகபுரம் ஒன்பதாம் குறிச்சி வீதியில் மதுபோதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை...

ஆனைக்கோட்டையில் உதயமானது அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம்!

சிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மருத்துவ சேவை நிலையத்திற்கான பெயர்ப் பலகை திரைநீக்கம்...

யாழ் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களின் கைவிரல் ரேகை இடும் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள உத்தியோகத்தர்களின் வரவு மற்றும் மீள்செல்கை கைவிரல் ரேகை இடும் இயந்திரங்கள் மூன்று கழிவு ஒயில் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக பதிவாளர் காண்டீபன், கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு நேற்று (01) பதிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாக மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கைவிரல் ரேகை இயந்திரங்களே இனந்தெரியாத...

வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போரட்டம்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் நாளை (3/4/2019) புதன்கிழமை காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டதினை மேற் கொள்ளஉள்ளனர் . எனவே அன்றைய தினம் வடமாகாணத்தின் அனைத்து மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் ப ட்டுள்ளது ..

உஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வுகூறல்!

நாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு உஷ்ணமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு...

சுதாகரின் பிள்ளைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனாதிபதி தவறியுள்ளார்

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சாடியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

அரசியல் கைதிகளின் விடுதலையில் தலையிட முடியாது: தலதா அத்துகோரள

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையில் எந்ததொரு தலையீட்டினையும் தற்போதைய நிலைமையில் மேற்கொள்ள முடியாதென அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பயங்கரவாத தடைச்சட்டத்தில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரத்தில்...

கலப்புப் பொறிமுறை குறித்த விவாதம் கலப்புப் பொறிமுறைக்குள்ளேயே எம்மைச் சிக்க வைத்துவிடும் – மணிவண்ணன் எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் ஆரம்பித்து வைத்திருக்கின்ற கலப்புப் பொறிமுறை தொடர்பான விவாதம் சர்வதேச விசாரணை பற்றி பேசாது கலப்புப் பொறிமுறைக்குள்ளேயே தமிழ் மக்களைச் சிக்கவைக்கும் தந்திரோபாயமாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் சர்வதேச விசாரணை எனும் நிலைப்பாட்டிலிருந்து எவர் மாறினாலும் அவர்கள் தொடர்பில் மக்களிடம் புரிதலை ஏற்படுத்தவேண்டிய...

தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிழை தெரிவின் பின்னர் பொதுமகன் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 31.03.19 அன்று முப்புரம் வட்டார தொகுதியின் மூலக்கிழை தெரிவு நடைபெற்றுள்ளது மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த...

பிரமிட் வர்த்தக முறைமை: யாழில் திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை!

மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட வர்த்தக முறைமையான பிரமிட் வர்த்தக முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன் யாழில் திறக்கப்பட்டு உள்ள அலுவலகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி யாழ்.உதவி காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறித்த வர்த்தக நடவடிக்கைக்காக யாழ் நகரில் புதிதாக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts