‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடலில் “வடமாகாணத்தின் உற்பத்தியும் சந்தையும்”!!

வடக்கு வட்டமேசை (Northern Province Round Table) கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (08) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றது. கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக...

யாழ் முதல்வரின் வாகனத்தை மீள கையளிக்க ஆளுனர் அதிரடி உத்தரவு!

யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்டின் உத்தியோகபூர்வ வாகனத்தை திருத்தம் செய்து, உடனடியாக ஒப்படைக்கும்படி வடக்கு ஆளுனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வடக்கு முதலமைச்சருக்குரிய வாகனத்தையே ஆனல்ட் தற்போது பாவித்து வருகிறார். இது நிர்வாக ஒழுங்குமுறைமைக்கு மாறானது. இது, ஆளுனருக்கு சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தே, இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். யாழ் மாநகரசபை முதல்வர்களிற்குரிய உத்தியோகபூர்வமான வாகனம் இருந்தபோதும்,...
Ad Widget

அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறையிட விசேட எண்!

அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி '1955' என்ற தொலைபேசி இலக்குத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு வேகத்துடன் பயணிக்கும் பஸ் வண்டிகளின் சாரதிகளின் சேவையை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தும் வகையிலான...

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஆசனங்கள் இரண்டால் குறைய வாய்ப்பு!!

வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், அது தொடர்பில் மக்களை அறிவுறுத்த தமிழ் அரசியல்வாதிகள் தவறியுள்ளனர். இதன் காரணமாக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. வாக்களர்கள் நீக்கப்பட்டால், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின்...

நல்லூர் திருவிழா சோதனை நடவடிக்கைகளுக்கு ஸ்கானர் (metal detector) இயந்திரங்களைப் பொருத்த நடவடிக்கை!

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ காலத்தில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சோதனை நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பை உறுதிப்படுத்த ஸ்கானர் (metal detector) இயந்திரங்களைப் பொருத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார். வடக்கு ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

விசேட தேவையுடையோர் மற்றும் பாடசாலை மாணவிகளுக்காக விசேட பேருந்து சேவை!!

வடக்கு மாகாணத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமைப் பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தை ஆகிய...

உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் -சீ.வீ.கே.சிவஞானம்

வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். பட்டதாரி நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் இன்றையதினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்....

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்களுக்கான தெளிவுபடுத்தல் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் எதிர்வரும் 12 ஆம் திகதி (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. களுவாஞ்சிக்குடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்தில்...

ஐ.தே.க. வுக்கு ஆதரவு கொடுத்தும் கூட்டமைப்பால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை – கோட்டா

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ...

காய்சலுக்காக பயண்படுத்தும் மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

தற்போதைய சூழ்நிலையில் காய்சலுக்காக அஸ்பிரின் மற்றும் பிற ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்ரிறொயிட் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்று காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும்...

உள்வாரி பட்டதாரிகளுக்கு வேலை வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு – பிரதமர் ரணில்

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும்போது உள்வாரி பட்டதாரிகளுக்கு வேலைகளை வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எனினும், வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் எந்தவிதமான பாரட்சமும் காட்டப்படவில்லையெனக் குறிப்பிட்ட அவர், வெளிவாரிப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தொழிலொன்றில் இருந்துகொண்டே பட்டத்தைப் பெறுவதுடன், அதன் பின்னர் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்றனர். வேலைவாய்ப்புக் கிடைக்கும்போது...

வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க இடமளிக்க மாட்டேன் – ரணில்

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர்...

நல்லூர் திருவிழா: தமிழர் பண்பாட்டைப் பாதுகாக்குமாறு வலியுறுத்து

நல்லூர் ஆலயத் திருவிழா காலத்தில் தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலாசார உடைகளை பக்தர்கள் அனைவரும் அணிந்து வரவேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் எஸ்.நிஷாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கோயிலின் பெரும்...

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்களுக்குள் கைகலப்பு – நால்வர் காயம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடு நீடித்த நிலையில் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில்...

வடக்கில் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு, நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது...

பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த மனிதன்!!

தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்தார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஜபாட்டா. என்ன... பறந்தே கடந்தாரா? இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா. விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. ஜெட் பறக்கும் தட்டுகள் கொண்டு மனிதர்களை பறக்க வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு இருந்தார் ஃப்ரான்கி. அதற்கான தொழிற்நுட்பத்தையும் சாத்தியப்படுத்திய இவர்,...

அரிசியில் கலப்படம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் நிறமூட்டப்பட்ட சிவப்பு பச்சை அரிசி தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாத்தறை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டன. இதன் மாதிரிகள் ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய...

சாந்தி எம்.பி தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார் – சிவமோகன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார், ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி மரணம்!

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் சுப்ரமணியம் கங்கேஸ்வரி (வயது -72) என்பவரே கொல்லப்பட்டார். வீட்டில் மூத்த சகோதரரும் இளைய சகோதரனுக்கும் இடையே...

முல்லைத்தீவில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்றம்!

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை நோக்கி நேற்று இரவு இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அம்பகாமம் பகுதியில் தற்பொழுது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading posts...

All posts loaded

No more posts