- Wednesday
- September 2nd, 2026
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 14 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 13 உறுப்பினர்கள் அடங்கலாக 27 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்...
வடக்கு மாகாணத்தின் ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை பகுதியில் நடாத்தப்படும் இராணுவ சோதனை நடவடிக்கையினால் தினசாி அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா். பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. பயணிகள் பேருந்துகளே முழுமையாக சோதனையிடப்பட்டு வருவதுடன் கடந்த ஒரு வாரகாலமாக போர்க் காலத்துடன் ஒப்பிடும் வகையில் பேருந்துகளில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள்...
தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ராஜகிரிய, கோட்டே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். எந்தவித...
இலங்கையின் சுதந்திர தினத்தை ஓட்டி 512 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் தீா்மானத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளதுடன், நாளைய தினம் இவா்கள் விடுதலை செய்யப்படவுள்ளனா். அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படி ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த...
இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தின் தான்தோன்றித் தாவரம் பனை. இப்பெருமரம் தமிழ்மக்களின் பண்பாடு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியனவற்றில் உயிரோட்டமான பங்களிப்பை நல்கித் தமிழ்த்தேசியத்தின் மிடுக்கான அடையாளமாகத் திகழ்கின்றது. தமிழின் முகவரியாக விளங்குகின்ற இப்பெருவளத்தின் அபிவிருத்திக்கென இதனுடன் எவ்விதத்திலேனும் தொடர்புற்றிராத தென்னிலங்கைச் சிங்களவர் ஒருவரைப் புதிய அரசாங்கம் தலைவராக நியமனம் செய்திருக்கிறது. அங்கு தொட்டு, இங்கு தொட்டுக் கடைசியில்...
யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது நாய்த்தொல்லையை கட்டுப்படுத்துமாறு விவாதிக்கப்பட்ட நிலையில் சீனாவுக்கு கப்பல் மூலம் அனுப்பலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து மண்டபத்தில் சிரிப்பொலியுடன் சலசலப்பும் ஏற்பட்டது. யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது துறைசார்ந்த மீளாய்வு நடைபெற்றவேளை யாழ்.பல்கலைக்கழக...
கொரோனா வைரஸ் எந்தவொரு உணவு பொருட்கள் ஊடாகவும் பரவாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியின் சளி உடலுக்குள் சென்று, தும்மல் அல்லது வேறு வழிகளில் நோயாளியின் தொற்று, வேறு ஒருவரின் உடலுக்குள் செல்வதன் காரணமாகவே...
பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் இறைச்சி சாப்பிட்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மகாதேவன் சிகேந்தினி (35) என்ற பெண்ணே உயிரிழந்தவாராவர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், கோண்டாவில் வடக்கு பகுதியில் கடந்த 29 ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு உணவாக கோழி இறைச்சி மற்றும்...
கடந்த அரசின் கைக்கூலிகளாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டனர். அதற்கு முக்கியமானவர் சுமந்திரனே. அரசின் அடிமைத்தனத்திற்குள் எமது மக்களை கொண்டு சென்றவர் அவர்தான் என வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது மாணவனாகிய சுமந்திரனை நான் தனிப்பட்ட...
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனினும் மீதமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனர்” இவ்வாறும் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – பலாலி படைத் தலைமையகத்தில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட இராணுவக் கட்டளைத்...
பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன நேற்று (புதன்கிழமை) சுமார் 100 பேரும் இன்று 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கன்...
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு 8.15 மணியளவில் யாழ்ப்பபாணம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் இணைந்து...
பட்டதாரிகள் மற்றும் அதற்கு நிகரான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு தொழில் வாய்ப்புகளை வழங்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதி ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அரசாங்க, பகுதியளவு அரச மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கேற்ப, பட்டப் படிப்பிற்கு பொருத்தமான தொழில் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின்...
முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. ,தற்கமைய, பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசமொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகும். பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக்கவசமொன்றின் விலையும் 15 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. N95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விலைகளுக்கு...
கொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவிவருகின்றது. இந்த வைரஸ் இதற்கு முன்னர்...
உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயர்வேத ஒளடதங்களை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொரோனா வைரஸ் தொடர்பான கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை அல்லது 4 உருண்டைகளை பயன்படுத்துவது பொருத்தமானது என ஆயர்வேத மருந்தக...
சிங்கள மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டே சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இந்த வாரம் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறித்து...
கொரோனா வைரசின் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது. இது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சரும், பதில் கல்வி அமைச்சருமாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார். சீனாவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில்...
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம் என அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பாக அரச சுகாதார அதிகாரிகளால்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில்...
Loading posts...
All posts loaded
No more posts
