- Sunday
- August 30th, 2026
வட மாகாணத்தில் சினோபாம் 1வது தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (29) வியாழக்கிழமையும் இடம்பெற்றன. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. யாழ் மாவட்டத்தில் 18,039 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5,110 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7,865 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 9,377 பேருக்கும் ஆக வட மாகாணத்தில் மொத்தமாக 40,391 தடுப்பூசிகள்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாய நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக வழிபாட்டு தலங்கள், திருமண மற்றும் ஏனைய வைபவங்களின்போது கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளை மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வழிபாட்டு தலங்களுக்கான கோவிட் -19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்...
நாட்டில் குறுகிய காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளமை சிறிய விடயமல்லவென சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்காவிடின், மீண்டும் கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கடந்த புதன்கிழமையுடன் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருந்தது. இந்நிலையில் நேற்று...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து...
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது -44) என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி...
தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் தனியார் பேருந்துகளில் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அதற்குப் பின்னர், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவதானம்...
வடக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 800 ஆக பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்றினால் 164 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கில் கொரோனாத் தொற்று நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவித்த...
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன்போது அந்த இடத்தில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணி அளவீடு செய்ய வேண்டாம் என்ற...
யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இளைஞனின் சடலம் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. நாவாந்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள்...
தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ்...
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 2 இலட்சத்து 71...
கொத்தாலவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் காலை 11 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று புதன்கிழமை இணையவழிக் கற்பிப்பித்தலில் இருந்து விலக முடிவு செய்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின்...
அண்மைய நாள்களில் கோவிட்-19 தொற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகமாக அடையாளம் காணப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அதன்படி, சிகிச்சைப் பிரிவுகளில் ஒக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட இடம் இப்போது நிறைவடைந்துள்ளதாக பல மருத்துவமனைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர்...
யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாண...
நாட்டில் உள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விடயம் குறித்து...
வட்டுவாகலில் காணி அபகரிப்பைத் தடுக்க ஒன்றுகூடுமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசு காலத்திலும் காணி சுவீகரிப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வட்டுவாகலில் 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஒரு பகுதியாக...
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொறோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம்...
சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள், “சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான தடைச்சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில்...
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராமம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணப் பணியினை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர். இந்த நிவாரணப் பணியானது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இராணுவத்தினருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டிருந்தது. இராணுவம் மற்றும்...
மக்களுக்கு கடமையாற்றும் போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல என வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் - நான்...
Loading posts...
All posts loaded
No more posts
