- Saturday
- August 29th, 2026
திடீர் மூச்சுத் திணறல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அருள்டயஸ் கிவின்சலா என்ற பெண் குழந்தையே உயிரிழந்தார். நேற்று முன்தினம் மாலை குழந்தைக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக புங்குடுதீவு பிரதேச மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக...
அடுத்த வருட ஆரம்பம் முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கையில் தடுப்பூசி அட்டை உடன் வைத்திருத்தலை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்களுக்கு சிறப்பு செயலி (ஆப்)...
2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக கூறினார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை விடுமுறை வழங்கப்படும் என்றும்...
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை...
நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று காலை முதல்...
இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார். மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை ஜீப்பை முதன் முதலில் பயன்படுத்தியது அமெரிக்க ராணுவம் என்று கூறப்படுகிறது. 1942 ஆம்...
புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு இன்று கவயீர்ப்புப் பேரணியை முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு சிவில் சமூக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தின் இடைநடுவே வீதியில் பயணித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி வழங்கிய உறுதிமொழிகளையடுத்து பேரணி முடிவுக்கு வந்தது. புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த யோகராசா நிதர்ஷனா...
காங்கேசன்துறை குமார கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறை குமார கோயில் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காலப்பகுதியில் கோயில் வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர் கோயில் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, குமார கோயில் புனரமைக்கப்பட்டு, ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று...
றிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று (திங்கட்கிழமை) இதனைத் தெரிவித்தார். இருப்பினும் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என கூறினார். கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு...
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கான கண் பரிசோதனை கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 370 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாளன்று 320 மாணவர்கள்...
உண்ணி காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாள்களின் பின் நேற்று உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்ற மூதாட்டியே உயிரிழந்தார். கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை...
முல்லைத்தீவு, மூங்கிலாறில் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ வல்லுநர் அறிக்கையிட்டுள்ளார். அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். யோகராசா நிதர்ஷனா (வயது-12) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். திருகோணமலையில் மாணவர் விடுதியில்...
இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம்...
டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹொங் கொங் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் இலங்கை உள்ளடங்களாக பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது. இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு...
சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும் பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட...
வலி.வடக்கு பிரதேசப் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று (17) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை, படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த எதிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காணி...
தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்....
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் தரம் 7இல் பயிலும் மாணவர் ஒருவர்...
சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில் மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்...
Loading posts...
All posts loaded
No more posts
