யாழில் விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- மனைவி காயம்

துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வழமை போன்று நேற்று காலை, விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது. இதன்போது வெடித்து சிதறிய...

இலங்கையில் சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 89 சிறுவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரை சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக குடும்ப நலப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்தராமலி டி சில்வா தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கர்ப்பிணித் தாய்மார்களின் மரணங்கள் அனைத்தும்...
Ad Widget

யாழில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3ஆவது கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக...

சதொசக்களில் அரிசி, சீனி உள்ளிட்ட 50 வகை பொருட்கள் குறைந்த விலையில்!!

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரை அரிசி உள்ளிட்ட 50 அத்தியாவ சிய பொருட்களை சதொச மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப்பொருட்கள் சந்தையில் விற்பனை...

அரச ஊழியர்களின் சம்பளத்தை 18,000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும்!!

அரசு சேவையாளர்களின் மாதாந்த சம்பளத்தை 18,000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என ஒன்றிணைந்து இலங்கை அரச சேவையாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது. தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்ற (12) கல்முனையில் நடைபெற்றது இங்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அனைத்து...

அதிகாரப்பகிர்வை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் -எம்.ஏ.சுமந்திரன்

13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சுன்னாகத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் "தமிழர்தம் அபிலாசைகளில் சர்வதேச நாடுகளின் கரிசனை தொடர்பாக சாணக்கியர்களின் கருத்துப் பகிர்வு" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்விலேயே...

யாழ். இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம், காரைநகரில் அமைந்துள்ள எலார கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படை சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, கடற்படையின் வடக்கு கடற்படைக் கட்டளையகம் 2021/01 மற்றும் 2021/02...

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் நோய் அறிகுறிகள் குறித்த அறிவிப்பு!

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என சிறப்பு மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்துள்ளார். ஃபைசர் மூன்றாவது டோஸை செலுத்தும்போது, ​​கொரோனா போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்...

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் – ஜனாதிபதி

பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு!

எரிவாயு நிறுவனங்களால் புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். எரிவாயு வெடிப்புகளை விரைவில் நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம்...

கொழும்பு யாழ் தனியார் சொகுசு பேருந்து விபத்து!! ஒருவர் பலி பலர் படுகாயம்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து (AC bus) மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145 வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பஸ் உருண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது. இதன்போது பஸ்ஸில் பயணித்த பலர் படுகாயமடைந்துள்ளதுடன்...

இலஞ்சம், ஊழல் சம்பவங்கள் முறைப்பாடளிக்க உத்தியோகபூர்வமாக இணையத்தளம்

நாட்டுமக்கள் தமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இலஞ்சம் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய அனுபவங்களை முறைப்பாடு வடிவில் பகிர்ந்துகொள்வதற்கும் அதுகுறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்றவகையில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டுள்ள 'அப்பேசல்லி' என்ற இணையப்பக்கம் சர்வதேச இலஞ்ச, ஊழல் ஒழிப்பு தினமான 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ட்ரான்ஸ்பேரன்ஸி...

15ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும்!

தனியார் பேருந்துகளின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன எதிர்வரும் 15ஆம் திகதி முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தனியார் பேருந்தின் உள்ளூர் சேவை பஸ்கள்...

அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பிற்கு இடமளிக்க முடியாது – அரசாங்கம் திட்டவட்டம்!

வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரச ஊழியர் ஆட்சேர்ப்பிற்கும் இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி

நாட்டின் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியாக இலங்கை மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் கொழும்பு நகரப் பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது....

இலங்கையின் தொல்பொருட்களை சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்து!

இலங்கையின் தொல்பொருட்களை ஆய்வுப் பணிகளுக்காக சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கமைவாக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த உடன்படிக்கைக்கு அமைய, இலங்கையின் தொல்பொருள் ஆய்வுப் பணிகளுக்காக, சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அந்த்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் – முதல்வர்

வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதென யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகள் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

மக்களை ஏமாற்றுகின்றதா லிட்ரோ கேஸ் நிறுவனம்??

பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று 9 ஆம் திகதி காலை சிவப்பு சீல் லேபில் ஒட்டப்பட்ட லிட்ரோ கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு எடுத்துச் சென்ற நிலையில், அந்த லேபிளை அகற்றியபோது, ​​சிவப்பு லேபிளுடன் பின்னால் பழைய வெள்ளை லேபிள் சுற்றி இருந்துள்ளது. இந்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாக...

பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா கொத்தணிகள் – மீண்டும் மூடப்படுகின்றன பாடசாலைகள்?

பாடசாலைகளுக்குள்ளும் கொரோனா கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். “பாடசாலை கட்டமைப்புக்குள் நிர்வாகப் பிரிவினர்...
Loading posts...

All posts loaded

No more posts