- Friday
- April 24th, 2026
06 பொலிஸ் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது. அந்த பொலிஸ் பிரிவுகளில் வசிப்பவர்கள் தற்போது வழமை போன்று தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு,...
யாழ். கொரோனா சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்று (வியாழக்கிழமை) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய்...
இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்துள்ளார். மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,...
தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சிந்திக்கிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும்...
நுகேகொட – மிரிஹான பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2...
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்துப் பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அஸ்கிரிய பீடாதிபதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர். பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி...
மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் தடையின்றி கிடைக்காவிடின் புத்தாண்டு காலத்தில் முழு நாடும் இருளில் மூழ்க வேண்டிய நிலைமை ஏற்படும். 12 அல்லது 15 மணித்தியாலங்கள் வரை மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய தன்மையே காணப்படுகிறது. 1 மணித்தியால மின்துண்டிப்பை அமுல்படுத்தியிருந்தால் 10 மணித்தியால மின்துண்டிப்பை தற்போது அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என இலங்கை மின்சார...
புத்தூர் மேற்கு, நவக்கிரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களின் முன்னர் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டடப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீட்கப்பட்ட குறித்த இளைஞன் சிகிச்சைக்காக அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தூர் மேற்கு, நவக்கிரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் வயது 30...
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பதாக தெரிவித்துள்ளார். அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, கைதிகள்...
எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர்...
சில நாட்களேனும் நாட்டை முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பினை தலைமையகமாக கொண்ட தமிழ் ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின் வெட்டினை வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது....
நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்ல தவறியமையால் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்ய...
எரிபொருள் சேவை விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு அரசாங்கம் இவ்வார காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின் எதிர்வரும் வாரம் முதல் நாடுதழுவிய ரீதியில் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம். எரிபொருள் பற்றாக்குறை என தொடர்ந்து எம்மால் புலம்பிக்கொண்டிருக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். மருதானை சனசமூக...
டீசலினை பெற்றுக்கொள்வதற்காக இன்றும்(புதன்கிழமை) நாளையும் வரிசைகளில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 37,500 மெட்ரிக் தொன் டீசலை கொண்டுவந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி டீசலை இறக்க முடியாமல்போன காரணத்தினால் டீசலை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு...
எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 4ஆம், 5ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்....
நாட்டில் இன்றும்(புதன்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் இன்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை 6 மணித்தியாலங்களும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும், இரவு 10 மணிமுதல்...
கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்களின் வீட்டினுள் இருந்து 3 வாள்களை மீட்டுள்ள கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை இரவு புகுந்த...
அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை....
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை...
Loading posts...
All posts loaded
No more posts
