புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்து இல்லை !!

மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார...

கோட்டாபய ராஜபக்சவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலில் தொடர தீர்மானித்தால் அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப்பட்டியல் ஆசனமொன்று வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ச அரசியலில் தொடரும் எண்ணம் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அறம்பேபொல,...
Ad Widget

வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு

வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்குத் தேவையான டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க முடியுமென நம்புவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். இதற்காக மிகவும் குறைந்த தொகையான 15...

வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி – வாசுதேவ நாணயக்கார

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை...

வளிமண்டல தளம்பல் நிலை இலங்கையை விட்டு நகர்கிறது!! ஆனாலும் மழை பெய்யகூடும்!!

குறைந்த மட்ட வளிமண்டல தளம்பல் படிப்படியாக இலங்கையை விட்டு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யகூடும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!!

இன்று (02) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த அறிவிப்பு!!

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலைகளில் இன்று மாற்றம் இல்லை!!

எரிபொருள் விலைகளில் இன்றைய தினம்(1) திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் – சரத் பொன்சேகா

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான விலைமானுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்....

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்பதால், பொது மக்கள் அவதானமாக இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் சப்ரகமுவ,மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருதால் ஆற்றங்கரையோரங்களை அண்டி வசிக்கும் மக்கள்...

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை!!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா காவற்துறை அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ‘மொரிஸ்’ என்றழைக்கப்படுகின்ற செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் நீதவான் மாபா பண்டார...

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்!!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டு உயர்தரத்துக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எண்ணை தாங்கி மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று (31) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது. காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற...

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நேற்று புதன்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை, மன்று இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும்...

இன்று முதல் நடைமுறைக்கு வரும் VAT வரி அதிகரிப்பு..! வெளியாகியுள்ள தகவல்

VAT அல்லது பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் VAT வரியை அதிகரிப்பது குறித்த யோசனையை...

அரச அதிகாரிகளுக்கான விஷேட சுற்றறிக்கை!!

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னவின் கையொப்பத்துடன் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி...

பெட்ரோலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டினை வந்தடைந்தது!

36 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று(புதன்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மத்திய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்களின் தடையை நீக்கியமை வேடிக்கைக்குரியது- பார்த்தீபன்

வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மற்றும் முதலீடுகள் என்பனவற்றை தமிழ் பிரதேசங்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்கும் மத்திய அரசாங்கம், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடைகளை நீக்கி, இலங்கையில் முதலீடு செய்யுமாறுக் கோரியுள்ளமை வேடிக்கைக்குரியது என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார். ஜப்பான் அரசாங்கம் யாழ்.மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகன இறக்குமதி செலவுக்கு என வழங்கிய...

கொழும்பில் காணாமல்போயுள்ள தமிழ் மாணவன்! தாயார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!!

கொழும்பில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ள மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு மாணவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு தனியார் கல்லூரியில் படித்து வரும் சம்சுதன் மன்னர் மன்னர் (ரஷீத்) எனும் மாணவன் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் தொடர்பில்...
Loading posts...

All posts loaded

No more posts