Ad Widget

இன்று முதல் நடைமுறைக்கு வரும் VAT வரி அதிகரிப்பு..! வெளியாகியுள்ள தகவல்

VAT அல்லது பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் VAT வரியை அதிகரிப்பது குறித்த யோசனையை முன்மொழிந்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதம் நேற்றைய தின நடைபெற்றதுடன் இன்றைய தினமும் நடைபெறவுள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்த வாக்கெடுப்பு நாளைய தினம் நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களின் பின்னர் நடைபெறும் வாக்கெடுப்பினைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது வழமையானது.

எனினும், பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வரிகளை குறைத்தமை குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts