குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம்!!

உலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. zoom தொழிநுட்பத்தினூடாக இடம்பெற்ற குரங்குக் காய்ச்சல் தொடர்பான விசேட கலந்துரையாடலின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா, வெளிநாடுகளில் இருந்து அறிகுறியற்ற நோயாளர்கள்கூட...

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என...
Ad Widget

இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இன்று!

இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்படி சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தைக் காண முடியும்....

யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் தற்கொலை!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நகர் பகுதியில் கடை ஒன்றினை நடத்தி வந்த 37 வயதான சி.சிவரூபன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமீப காலமாகவே மீட்டர் வட்டிக்கு வாங்கிய பணத்தினை செலுத்த முடியாத நிலையில் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த அவர் நேற்று (வியாழக்கிழமை) தற்கொலை செய்துக்...

யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்தம் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில், இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரத்த வங்கி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா...

நாட்டில் இன்று கடும் மழைக்கான சாத்தியம்!!

பிற்பகல் அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும்...

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.அதில் எரிபொருள் தட்டுபாடும் முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது. நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல துறைகள் பாதிப்படைகின்றன. இந்நிலையில் இந்த பருவத்தில் நெற்செய்கைக்காக 72 மில்லியன் லீட்டர் டீசல் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நிலம் தயாரிப்பதற்கு 40 மில்லியன் லீட்டர் டீசல்...

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் எரிபொருளுக்கான முன்பதிவுகளை வழங்காததால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியன தேசிய எரிபொருள்...

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 22 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை சீனியின் புதிய விலை 238 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மா 96 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோதுமை...

யாழில் பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது!! மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்

பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் வசந்தசேனன் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பாண் ஒரு இறாத்தல் 220 தொடக்கம் ரூபா 250 ரூபா வரை விற்பனை செய்தனர். எனினும் அப்போது யாழ்ப்பாணத்தில் பாண்...

மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டார் டக்ளஸ்!

யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர்கள் இன்றைய தினம் பார்வையிட்டனர். 200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள வியாபார மத்திய நிலையத்தினை விவசாயிகளுக்கும் மக்களும் நன்மையளிக்கும்...

காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தி இளைஞன் ஒருவர் தற்கொலை!!

ஏழாலை பகுதியில் தனது காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தி இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் இளைஞன் ஒருவர் கடந்த 5 வருடமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக காணொளி அழைப்பை காதலிக்கு ஏற்படுத்தி குறித்த இளைஞன் தனது உயிரை மாய்த்துக்...

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!!

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று புதன்கிழமை சிரமதானம் பணிகள் இடமபெற்றன. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு!!

நாட்டில் உள்ள சில மருத்துவமனைகளில் பெரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இவ்வாறு தெரிவித்தார். பொதுவாக இந்நாட்டில் நோயாளிகளின் சிகிச்சைக்காக 1300க்கும் மேற்பட்ட வகையான மருந்துகள்...

மழையுடனான காலநிலை நீடிக்கும்!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என...

அச்சுவேலியில் கத்தி முனையில் வழிப்பறி!

அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்து , திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அதன் போது பெண்ணொருவரின்...

பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்ப்பு!!

அரசாங்கம் கொண்டு வரவுள்ள நிதிக் கொள்கையின் ஊடாக பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் குறைந்துள்ளதாலேயே எதிர்வரும் காலங்களில் பொருட்களின் விலையில் துரிதமான வீழ்ச்சியை காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு...

போதையை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்களும் விற்பதாக குற்றச்சாட்டு!

மருத்துவ சிட்டை இல்லாவிடின் 25 ரூபாய் வலி நிவாரணி மாத்திரைகளை 250 ரூபாய்க்கு சில மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சில வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, அவை போதையை தர கூடியவை. அவ்வாறான...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்படவேண்டும்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற குறித்த கூட்டம் தொடர்பில் நல்லூர் தொகுதிவெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளையின்...

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் புதிய தகவல்!!

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு நேற்று(01.11.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“எதிர்காலத்தில் லிட்ரோ...
Loading posts...

All posts loaded

No more posts