காணாமல்போனவர் வீடு திரும்பினார்

இளவாலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர், குடும்பப் பிரச்சினை காரணமாக ஒழிந்திருந்து விட்டு வீடு திரும்பியுள்ளதாக இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் பிராந்திய இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை

வடமாகாணத்தில் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சிறுவர் பராமிரிப்பு நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளர் தங்கவேல் உமா தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

வயல்களில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

வயல் காணிகளில் தனியார் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதியில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார். (more…)

வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோரின் விபரங்களை ஜனாதிபதி செயலகத்தினால் சேகரிப்பு

வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் விபரங்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலக விசேட செயலணியால் திரட்டப்பட்டு வருகின்றது. (more…)

வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவரையும் இந்திய கடற்படையினர் விடுதலை செய்தனர்

இந்திய கடற்பரப்பிற்குள் திசைமாறிச் சென்ற வல்வெட்டித்துறை பகுதி இரு மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க சமாச தலைவர் வ.அருள்தாஸ் தெரிவித்தார். (more…)

பாதுகாப்பு செயலாளர் யாழ்.விஜயம்

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். (more…)

குடும்பஸ்தரை காணவில்லை என முறைப்பாடு

குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.நல்லூர் அடையாளி வீதியைச் சேர்ந்த கணேஸ் மகேந்திரன் (வயது 52) என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். (more…)

யாழில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து, தமிழ் சிங்கள புத்தாண்டு கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளை புதன்கிழமை காலை 7 மணி முதல் யாழ். நல்லூர் முத்திரைச் சந்தி சங்கிலியன் பூங்காவில் நடத்தியது. (more…)

மாதகல் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத முருகைக் கற்கள் அகழ்வு!- இருவர் கைது

மாதகல் கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் முருகை கற்களை அகழ்ந்து, ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்களின் ஓட்டுனர்களை கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

பாணின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

இலங்கையில் பாணின் விலை உயர்த்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலஙகையில் மின்சாரக் கட்டணங்கள் 26 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து பாணின் விலை உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. (more…)

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கான சூத்திரத்தினை இலங்கை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்தது. (more…)

சிறுமிகளை இணைத்து மீண்டும் கைதடி தனியார் சிறுவர் இல்லம் ஆரம்பம்

கைதடி சிறுவர் இல்லத்தில் இருந்து வெளியேறிய 24 சிறுமிகளையும் மீண்டும் அதே சிறுவர் இல்லத்தில் இணைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றத்தின் உத்தரவிட்டுள்ளது. (more…)

வெளிநாட்டவரின் கமெராக்கள் திருட்டு

நெதர்லாந்து பிரஜையொருவரின் இரண்டு கமெராக்கள் நேற்று புதன்கிழமை திருடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

ஒரு மாத காலமாகியும் சுழிபுரம் இறங்குதுறை திறந்து வைக்கப்படவில்லை என மக்கள் கவலை

சுழிபுரம் இறங்குதுறை நிர்மாணிக்கப்பட்டு ஒரு மாதகாலமாகியும் திறந்து வைக்கப்படாமையினால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சு மற்றும் யூ.என்.எச்.சீ.ஆர். ஆகியன இணைந்து சுமார் 12 மில்லியன் ரூபா நிதியில் சுழிபுரம் இறங்குதுறை நிர்மாணிக்கப்பட்டது. (more…)

இலங்கையின் முக்கிய இணையங்கள் மீது பங்களதேசில் இருந்து மீண்டும் தாக்குதல்!

இலங்கையின் முக்கிய இணைய தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பங்களாதேஷ் கிரே ஹெட் ஹெக்கர்ஸ் என்ற குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

பாடசாலை மாணவனைக் காணவில்லை!

புதுவருடத்தினத்தன்று வந்த கையடக்கத் தொலைபேசி அழைப்பை அடுத்து வீட்டிலிருந்து சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பவில்லையென்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது. (more…)

தனிமையில் வசித்த வயோதிபப்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

யாழ். நீர்வேலி மேற்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் பாவனையற்ற கிணறென்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகம் : வாசுதேவ நாணயகார

வடக்கில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவது முற்றிலும் உண்மையென சமூக மேம்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மக்களுக்கு வாக்களிப்பு தொடர்பில் தெளிவூட்டல் – பெப்ரல் அமைப்பு

வடமாகாண தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வடபகுதி மக்களுக்கு வாக்களிப்பு முறை தொடர்பில் தெளிவூட்டும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts