- Tuesday
- September 9th, 2025

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவ்வாறு...

இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையப் போவதில்லை என அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பேரவையில்இணையாது என நாடாளுமன்றதிற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும் என்றும் அதன்...

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு நேற்று அனுப்பப்பட்டார். அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிக்கின்றார் சிறுமியின் தாயார் வழங்கிய...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். [caption id="attachment_115149" align="aligncenter" width="600"] gotha-wife[/caption] கொலன்னாவ பிரதேசத்தில் சலூன் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு...

எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. துறுக்கி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது. நாட்டின் பிரதான கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டும்,...

பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. வலி. வடக்கு முன்கொடியேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த குழுவினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கடந்த 30 வருடங்களாக வலி. வடக்குப் பகுதியில்...

ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. பழைய லக்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ஆம் நிலை இயங்காமை, வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை...

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறியவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து நீதியை பாதுகாக்க முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படுகின்ற பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது என்று யாழ். போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. எனினும், ஆசிரியர்கள், அதிபர்கள் தமது பாடசாலைகளில் நற்பெயருக்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதால் அது...

குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் நேற்று (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்டமைக்காக தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு...

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி...

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்ககா 2.3 மில்லியன் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி பங்களிப்பினை யாழ்ப்பாண மரபுரிமை மையம் வழங்கவுள்ளது. குறித்த தோரண வாயிலின் பாதுகாப்பு , புனர்நிர்மாணம் மற்றும்...

நிதி நெருக்கடி காரணமாக அரச பணியாளர்களுக்கு மாதாந்த சம்பளம் செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொல்கஹவெல குருநாகல் தொடருந்து பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசின்...

உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே இதற்கு காரணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள...

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத...

தமிழர்களினுடைய வாழ்விடங்களில் திட்டமிட்டு அவர்களின் இன அடையாளங்களை அழித்து, சிங்கள பௌத்த அடையாளங்களை புகுத்துகின்ற, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினுடைய பாகம், தொடர்ந்தும் அரங்கேறிக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நேற்று (21.09.2022) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதிப் பேரணி யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து நெடுந்தூர பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதன் போது பெண்கள் அமைப்பினர் பெண் பிரதிநிதிகள் மகளிர் அபிவிருத்தி குழுக்களின் உறுப்பினர்கள்...

வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டி, குறித்த காணியினை துப்புரவு செய்து...

All posts loaded
No more posts