- Thursday
- September 4th, 2025

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் அபாத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது. இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து...

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...

கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தாயார் கிணற்றிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 3 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று மற்ற இரண்டு சடலங்களும் மீட்கப்படவுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலய கிணற்றிற்குள், நேற்று (3) மாலை இந்த அனர்த்தம் நடந்தது. கணவருடன்ஏற்பட்ட தகராறையடுத்து தனது பிள்ளைகளுடன்...

வடமாகாணத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கோரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 128 பேரும், மன்னார் மாவட்டத்தில் 85 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில்...

வடக்கில் மேலும் 9 பேருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 292 பேரின் மாதிரிகள் பரிசோதனையிலேயே 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 5 பேர், நவாலியில் கண்டறியப்பட்ட ஆசிரியையுடன் தொடர்புடையவர்கள் என்றும் மூவர்...

வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிசூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும் வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதன் மீது துப்பாக்கி பிரயோகம்...

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட்...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது 7 மாதக் குழந்தையை தடியால் அடித்துத்தும் ஒரு கையைப் பிடித்துத் தூக்கிச் சென்றும் இரக்கமின்றித் துன்புறுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அனைவரின் மனதையும் பதறவைக்கும் அந்த காணொலி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது. தாயார்...

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி...

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றினூடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. உறுப்பு...

வடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 431 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 7 பேருக்கு தொற்று...

வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 4 பேராக அதிகரித்துள்ளது. நேற்று மாந்தை மேற்கில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் உள்பட 42 பேர் வடமாகாணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை அன்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளி ஒருவருக்கும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் உள்பட சிலரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறப்பான சேவையாற்றி வரும் நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கே கோவிட் -19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்...

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக...

யாழ்.நகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். கொழும்புத் துறையில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் புகுந்த மூவரடங்கிய கும்பல் அங்கு வசித்த வயோதிபர்களை மிரட்டி 8 தங்கப் பவுண்...

கிளிநொச்சி, பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (புதன்கிழமை) உறுதியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் என்றும் மற்றைய மூவரும் பூநகரியைச் சேர்ந்தவர்கள் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 491 பேரின்...

கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய...

All posts loaded
No more posts