Ad Widget

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம்!! இவ்வருட பரீட்சை ஒத்திவைக்கப்படும்!!

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பரீட்சை ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும்...

நாடளாவிய ரீதியில் இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இணையவழியில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம்...
Ad Widget

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண் பதில் அதிபர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!!

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விநியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலரால் அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும்...

எரிபொருள் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் கா.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய எரிபொருள் வழங்கப்பட வேண்டும் அல்லது தமக்கான எரிபொருளை பெறுவதற்கு...

மாணவர்களுக்கு ஓகஸ்ட், டிசம்பர் தவணை விடுமுறைகள் இல்லை

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கான தவணை விடுமுறைகளை வழங்காதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பரீட்சைகள் நடைபெறும் நாட்களில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிணை!

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆசிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக மன்று உத்தரவிட்டது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

நாளை நாடு முழுவதும் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

நாட்டின் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

2022ஆம் ஆண்டு மூன்றாம் தவணை டிசெம்பர் 23ஆம் திகதிவரை நீடிக்கும்!!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை இந்த வருடம் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணை 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்...

விடுதலைப் புலிகள் கூட பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை!! -கல்வி அமைச்சர்

பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளால் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படவில்லை. யாழில் கூட இறுதிகட்ட யுத்தத்தின் போதும் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றன. எனவே நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு இடையூறின்றி பரீட்சைகளை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் இநதப் பரீட்சை இடம்பெறுகிறது. இந்தமுறை பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களுள் 4 இலட்சத்து 7ஆயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு...

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவடையவுள்ளன. இரண்டாம் தவணை ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

நெருக்கடியான சூழலிலும் கூட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23 (திங்கட்கிழமை) தொடக்கம் யூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தேவையான அனைத்தும் தயார் படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார். ஆணையாளர் இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப்...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!!

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் நேற்று அறிவித்தது. எனினும் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக அதன் பிரதிநிதிகள் தமது சங்கத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை என...

ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டம் : பரீட்சைகளை ஒத்திவைத்தது வடமாகாண கல்வித் திணைக்களம்

சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நாளை சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கு...

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!

இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர்...

பாடசாலை நேரம் ஒரு மணிநேரத்தால் அதிகரிப்பு!!

ஏப்ரல் 18, 2022 முதல் பாடசாலை நேரம் ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் முதலாம் பாடசாலை தவணை தொடக்கம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை நேரங்களை நிறைவு செய்வதற்கு இந்த...

2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!! 2022 உயர்தரப் பரீட்சை ஓகஸட்டில்!!

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடமொன்றை இவ்வருடம் திறக்க அரசு தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன...

அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடக்கும்

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்துப் பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அஸ்கிரிய பீடாதிபதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு!

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளில்வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது...

கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 198 புள்ளிகள்!!

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு 9.55 மணிக்கு பரீட்சைகள் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் 10.20 மணிவரை உத்தியோகபூர்வமாக வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் கல்வி வலயப்...
Loading posts...

All posts loaded

No more posts