- Friday
- December 19th, 2025
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வவுனியா வளாகத்தின் 25ஆவது வருட நிறைவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தரமுயர்த்துவதற்கு பாடுபட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்...
அடுத்த வருடம் வழங்கப்படவுள்ள பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் உதவித்தொகை அடுத்த மாதம் 15ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் வழங்கப்படும் என்றும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்கு நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நாட்டிலுள்ள தேசிய...
இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற கல்வி பொதுத் தராதர உயர்தரத் தேர்வில் தோன்றும் முஸ்லிம் மாணவிகள், தங்கள் சீருடையான பர்தாவுடன் தேர்வு எழுதுவதற்கு ஒரு சில தேர்வு மையங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இலத்திரனியல் உபகரணங்கள் பர்தாவிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு, பர்தாவைக் கழற்றி விட்டுத் தேர்வு எழுதுமாறு மாணவிகள் குறிப்பிட்ட சில...
ஊவா வெல்லச பல்கலைக் கழக மாணவர்கள் நாடாத்தும் "மலைத்தென்றல்" கலை கலாச்சார நிகழ்வின் ஓர் அங்கமாக "கலைத்திரள்" - அகில இலங்கை ரீதியிலான பாடசாலை மாணவர்களுக்கான கவிதை கட்டுரை போட்டிகளை நாடாத்துகின்றனர். பாடசாலை ரீதியில் நடைபெறும் இந்தப்போட்டிகளின் ஊடாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கான பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் சானிற்தழ்கள் மலைத்தென்றல் நிகழ்வில் வழங்கப்படும். கட்டுரைப் போட்டிக்கான தலைப்புக்கள்...
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. www.doenets.lk/exam என்ற இணைய முகவரி ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள் மீளாய்வுசெய்வதற்காக 87,002 விண்ணப்பித்திருந்தனர்.இதில் 953 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 20 ஆம் திகதி பரீட்சை முடிவடையும் வரையில் செயலமர்வுகள், பகுதிநேர வகுப்புக்கள், மாநாடுகள் என்பனவற்றை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும்...
நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்ட, 2,230 பரீட்சை மத்திய நிலையங்களில், 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள், இன்று (08) ஆரம்பமாகின்றன என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த பரீட்சைகளில், 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர், இம்முறை தோற்றவுள்ளனர். அதில், 220 பேர் விசேட தேவையுடைவர்களுக்கான விண்ணப்பத்தாரிகளாவர் என்று, பரீட்சைகள் திணைக்கள...
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர தேர்வு எழுதவிருக்கும் முஸ்லிம் மாணவிகளைத் தங்கள் கலாசார ரீதியான சீருடையுடன் தேர்வு எழுதுவது தொடர்பாக, எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாமல் இருப்பதை மத்திய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் கோருகின்றன. இது தொடர்பாக அகில...
அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று மூடப்படுகின்றன. மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 6ஆம் திகதி திறக்கப்பட இருக்கின்றன. இதேவேளை நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக மூடப்பட்டு இம்மாதம் 28ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.
ஜீசிஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீசிஈ உயர்தர பரீட்சை எதிர்வரும் எட்டாம் திகதி தொடக்கம் நாடெங்கிலும் இரண்டாயிரத்து 230 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும். இது வரை காலமும் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்ப பிரிவிற்கான புதிய கட்டிடத்தை அமைப்பதற்கும் , மருத்துவ பீடத்திற்கான 08 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் அடிப்படையில் ஒப்பந்தங்களுக்காக முறையே 424.43 மில்லியன் ரூபாவும் மற்றும் 564.67 மில்லியன்...
அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைவிடுமுறை எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 4ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும். பாடசாலைகள் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன. எதிர்வரும்...
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவிக்கையில், உயர்தர பரீட்சை எட்டாம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி...
3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் பாடசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்காக 3 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நாளை...
வடமாகாண கல்வி அமைச்சினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாத காலத்தை கடந்ததும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கு 418 ஆசிரியர் வெற்றிடம் காணப்பட்டது. அதனை நிரப்புவதற்காக...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 3 இலட்சத்து 15 ஆயிரத்து 27 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில், இதில் 2 இலட்சத்து 37...
எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்ற போது எந்த காரணம் கொண்டும் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற ஒரு பதவிக்காக நியமனம் வழங்கப்படமாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்கள் 113...
கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு இந்த வருடம் தோற்றுவதற்கான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம டபிள்யூ எம் என் ஏ .புஸ்பகுமார இது தொடர்பாக தெரிவிக்கையில் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் , தனியார் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அவர்களது...
ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரே பாடசாலையில் பல வருடங்கள்...
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை செய்யப்படும் என்று வட.மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார். வவுனியா, தோனிக்கல் முத்து மாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “ஞாயிற்றுக்கிழமைகளிலே தனியார் கல்வி நிறுவனங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
