கதிர்காமத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!!

கதிர்காமம் நகரில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 58 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் முன் கூடிய மக்களால் அப் பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. எனவே,...

ஆனைக்கோட்டையில் வயோதிபப் பெண் அடித்துக் கொலை!

ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வயோதிபப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி, பிரதேசத்தில் தனிமையில் வசித்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா எனும் வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிற்கு உதவி புரியும் உறவினர் ஒருவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது...
Ad Widget

பருத்தித்துறையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு கடூழிய சிறைதண்டனை

பருத்தித்துறையில் சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றயதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா. இளஞ்செழியன் குறித்த உத்தரவை பிறப்பித்தார். இதன்போது குற்றவாளிக்கு 05 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட...

பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 11 கிளிநொச்சி மாணவர்களில் 8 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் விடுவித்தார். கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக...

சட்டவிரோத கேபிள் ரீவி நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடு

யாழில் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கிவரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரச அனுமதி பெற்று கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கும் ஏ.எஸ்.கே நிறுவனத்தால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாது, கேபிள் ரீவி இணைப்புகளை வழங்க, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன்...

யாழில் கோடுரம்!!! : 3வயது குழந்தை வெட்டிப் படுகொலை!!!

வண்ணார்பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோயிலடியில் 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டாள். அவளது பேத்தியான குடும்பப் பெண் வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... மன நோயாளி எனத் தெரிவிக்கப்பட்டவரே தனது இளைய சகோதரனின் மகளை வெட்டிக் கொலை செய்ததுடன், தனது தாயையும் வெட்டிச்...

நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த இராணுவத் தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பான வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் 24 இளைஞர்களை கைது செய்திருந்த நிலையில் அவர்கள் காணாமல்...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 05 கோடி பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள்

காங்கேசன்துறை கடற்பரப்பில் ​வைத்து சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகள் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை (17.01.2018) கைப்பற்றப்பட்டுள்ளது. கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட வெற்று உரப்பபைகளில் இருந்து இவ்வாறான தங்க பிஸ்கட்டுக்களை கண்டெடுத்ததாக யாழ் பிராந்திய கடற்படையின் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜெயந்த டி சில்வா தெரிவித்துள்ளர். ஒவ்வொன்றும் 100...

முன்னாள் புளோட் உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு

ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீடொன்றில் முன்னர் புளொட் அலுவலகம் இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில்...

நெடுந்தீவில் 16 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களது 4 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்

யாழில் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது...

தேர்தல் வன்முறைகள்: 19 வேட்பாளர்கள் கைது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டதிட்டங்களை மீறியமை மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட நபர்களுள் 19 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 57 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 120 பேரில்...

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக முக்கிய உத்தரவு!

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக யாழ்.மாநகர சபைக்கு, மல்லாகம் நீதிமன்றமானது மூன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நேற்றயதினம் (வெள்ளிக்கிழமை) மல்லாகம் நீதிமன்றில் குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் குறித்த உத்தரவிரனை பிறப்பித்தார். இதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் குப்பைமேட்டினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் எனவும்,...

11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட விவகாரம்: 6 மாதங்களுக்குப் பின் பிணை

தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில், இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 6 சந்தேக நபர்களையும் விடுவித்து கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு கோட்டை...

தமிழ் பெண் அதிபருக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட நிலை!

ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை, காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது. அண்மையில், குறித்த அரசியல்வாதி தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்....

வழக்கு விசாரணைகளிலிருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் விடுவிக்கப்பட்டார்!

தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் சிலருக்கு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தை வழங்கியமை , தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை மீறும் செயற்பாடு என அந்த ஆலயத்தின் குருக்களுக்கு மல்லாகம் நீதிமன்றால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களில் நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மன்றத்...

தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசியவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை!

யாழில் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று சென்றிருந்த போது அவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட காரணத்திற்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில்...

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்; மூவர் வைத்தியசாலையில்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே மோதல்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில்...

மாவிட்டபுரம் குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி பொலிசாருக்கு அழுத்தம்

அரசியல் கட்சி ஒன்று ஆலயத்தில் வழிபாடாற்ற அனுமதித்ததாகவும் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாகவும் கூறி மாவிட்டபுரம் ஆலய குருக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தமிழ் அரசுக் கட்சி பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று (11) குருக்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த காங்கேசன்துறைப் பொலிசார் முயன்று வருவகாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் ஆலயத்துக்கும்...

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிக்கு 3 மாத சிறை

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்பவருக்குத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பறித்துள்ளது. குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் போன்ற இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்காமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டு இத்...
Loading posts...

All posts loaded

No more posts