- Sunday
- July 12th, 2026
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது...
ஊழியர் பற்றாக்குறை காரணமாக யாழ்.மாவட்ட காணி பதிவகம் முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24ஆம் திகதி முதல் காணி பதிவகத்தில் ஒருநாள் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமையால் , பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அது தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட காணி பதிவகத்தில் இரு உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றி வந்த நிலையில் ஒருவர் சுகவீனம் காரணமாக விடுப்பில் உள்ளார்....
காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை. அதனால்...
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடந்த திங்கட்கிழமை முதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் கருத்துத் தெரிவிக்கையில் ”எமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான நீர்ப்பம்பி செயலிழந்துள்ளமையினால் தண்ணீர் வசதியின்றித் தவித்து வருவதாகவும், இதனையடுத்து சிறிய ரக...
யாழ்.ஊர்காவற்துறை - காரைநகர் பாதை சேவையில் அரை நிர்வாணமாக மதுபோதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடல்...
உள்ளாடைகளுடன் முறிகண்டிக் காவலரண் பொலிஸார் அலைவதாகவும், அவர்கள் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த காவல் அரண் மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகக் கடந்த 2021 ஆம் டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்கள்...
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும், இதனை மாநகர சபையிடம் பல்வேறு தடவைகள்...
யாழ்.மாநகரசபை கலைக்கப்பட்டதன் பின்னர் மாநகரசபையில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் துணையுடன் தாங்கள் நினைத்தபடி மதிய நேர உணவுக்காக வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திங்கட்கிழமை பங்குனி திங்கள் நாள் அன்று மாநகர ஆணையாளர் பகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 3 மணி கடந்தும் மதிய நேர உணவுக்கு சென்று...
யாழ்.நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசெளரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்க்கும் பெண்கள் தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். யாழ்.நகருக்கு தினசரி பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசரி அதகரித்து வருவதாக வர்த்தகர்கள், பொதுமக்கள்...
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு கடல் போக்குவரத்தினை பயன்படுத்தும் உள்ளூர் மக்களை கடற்படையினர் விலங்குகள்போல் நடத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை படகில் முன்னுரிமைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஏற்றிவிட்டு, அதன் பின்னரே ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு தாமதமாகி படகில் அனுமதிக்கப்படுவதால் அரச உத்தியோகத்தர்கள்...
நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் இயற்கை உபாதைகளுக்கு உள்ளாவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம்,கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கும், பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீற்றர் இடைவெளி காணப்படுகிறது இவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ -9 வீதியூடாக பல...
பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று 9 ஆம் திகதி காலை சிவப்பு சீல் லேபில் ஒட்டப்பட்ட லிட்ரோ கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு எடுத்துச் சென்ற நிலையில், அந்த லேபிளை அகற்றியபோது, சிவப்பு லேபிளுடன் பின்னால் பழைய வெள்ளை லேபிள் சுற்றி இருந்துள்ளது. இந்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாக...
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர். இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாலை கிராமசேவகர் பிரிவின் எல்லைக்குட்பட்ட தெருவை தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்துக்கு ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டை...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் தார்ப்படுக்கை (காபெற்) வீதியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம் – மானிப்பாய் – பொன்னாலை வீதியும் சீரமைக்கப்படுகின்றது. நீண்ட காலம் சீரமத்தை எதிர்கொண்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வீதியின் சீரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். அண்மைய நாட்களாக முகமாலை வடக்குப் பகுதியில் கடும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. வாய்க்கால்களில் மண் ஏற்றப்பட்டு துரிசும் உடைத்தெறிய பட்டு மண் ஏற்றப் பட்டு வருகின்றது. இதனால் வெள்ள...
இணுவில் காரைக்கால் சிவன் கோயிலை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சி.கௌசல்யா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “சிலரின் வீடுகள் மற்றும் விவசாய காணிகளுக்குள் வரும் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை...
வவுனியா- மதவுவைத்தகுளம் பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காண முடியாத வகையில், உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு நிர்வாணமாக, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும், வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகாெள்ள...
யாழ்ப்பாணத்திலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்துக்குச் சென்று வருவதற்கு, உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின்போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத் தகவல்களையும், தகுந்த முன்னெச்சரிக்கையையும் வழங்குவதில் யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் பெரும் பங்காற்றி வருக்கின்றது. ஆனால், அந்தத் திணைக்களத்துக்குச் செல்வதற்கு உகந்த...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்கு ட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீ பவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நாடு...
Loading posts...
All posts loaded
No more posts
