- Thursday
- July 17th, 2025

பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை, நிலையான, மிகவும் அர்த்த பூர்வமான சுதந்திரமாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு தற்போது நம் அனைவர் மீதும் உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (04) நாட்டின் அனைத்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்...

இலங்கையின் 68ஆவது சுதந்திரதினம் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று காலை (4) 8.45 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது. சுதந்திரத்தின் இதயத்துடிப்பு என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள சுதந்திரத்தின நிகழ்வானது இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. காலையில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புகளும் மாலையில் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை...

கார்ல்டன் விளையாட்டு நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட்டில், நிதி மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் வெலிக்கடை சிறைச்சாலையில், விளக்கமறியல் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை உண்ணுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால், அவர்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்...

புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவிப் புகையிரதமாக இயங்கியது. இலங்கையில் உள்ள நீராவிப் புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரை 02.02.2016 இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தப் புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும்...

பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இரு கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைசாசத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமனம் பெறவுள்ள அவருக்கு அமைச்சு பதவியும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறையில் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கும் எவ்விதமான மேலதிக சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும், ஆயினும் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் தொடர்பான ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார். குறித்த சந்தேகநபர்கள் சாதாரண கைதி அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், கவிஷான் திஸாநாயக்க என்பவர் மாத்திரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தேவையற்ற...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் பெயரில் விசேட பொறிமுறையுடன் கூடிய நீதிமன்றத்தை உருவாக்கவே இலங்கை வருகிறார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பொரளை எம்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்...

மிரிஹானையில் உள்ள வீட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை முக்கிய பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்தே அவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இலங்கையின் நீதித் துறை பலமாகவும் சிக்கலாகவும் உள்ளதாக கூறிய மகிந்த ராஜபக்ஸ முடியுமான வரை மகனின் விடுதலையை துரிதப் படுத்துவது பிரதானம் எனக் கூறியுள்ளார். யோசித...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றார். நேற்று பகல் அவர் அங்கு சென்றதாகவும் இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவது தொடர்பில், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார எம்பி, தனது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மஹிந்த அணி கூட்டாளியும், பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில எம்பிக்கு எடுத்துக்கூறி, தொட்டதற்கெல்லாம் இனவாதம் பேசி, நாட்டை மீண்டும் இனத்துவேஷ குட்டையில் ஆழ்த்த முயல வேண்டாம்...

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறும் மாயையாகும் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் எப்போது நடைபெறும்...

"எதிர்வரும் பெப்ரவர் மாதம் 4ஆம் திகதி - இலங்கையின் சுதந்திர தினத்தன்று எம்மை விடுவிக்காவிடின் சிறைச்சாலைகளில் எமது விடுதலைக்கான போராட்டம் தொடரும்." - இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு...

ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர் காலத்தில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா...

ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில்...

தனக்கு தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனமை வருத்தமளிப்பதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் மக்கள் ஆட்சி முறை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினை எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்படவில்லை....

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பிக்குகள் சிலர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், முழுமையான அறிக்கையை, மல்வத்து மற்றும் கோட்டை மஹாநாயக்க தேரர்களுக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்...

திருகோணமலை மாவட்டம் சம்பூரில் ஆறு வயது சிறுவனொருவனின் மர்ம மரணம் அந்தப் பகுதியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தன் பெற்றோருடன் மீளக் குடியேறியிருந்த குகதாஸ் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு மர்ம மரணமடைந்துள்ளான். இந்தச் சிறுவனின் சடலம் கல்லோடு கட்டப்பட்ட நிலையில் இன்று...

ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதாக கூறிய 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு, இதுவரை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கப்படாத 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு பெப்ரவரி மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என...

பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவத்தினால் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்புக்களுடம் ஏற்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

All posts loaded
No more posts