- Monday
- July 20th, 2026
கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுககு அருகில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன. தற்போது...
புதிய பொலிஸ்மா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தரவுக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நாட்டில் பெரும்பான்மை மக்களின் நல்ல அபிப்பிராயம் பெற்ற ஒருவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை காரணமாக பொதுமக்களின் சிவில் அமைப்புகள் பலவும் புதிய பொலிஸ்மா அதிபருக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன. அத்துடன் இலங்கை வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் பணியாற்றி...
மஹரகம பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழையின் போது ஆமைக் குஞ்சுகள் மேலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹரகம வத்தேகெதர கெமுனு வீதி இலக்கம் 227/25 என்ற முகவரியைக் கொண்ட வீட்டின் மீது நேற்று மாலை 4.30 மணியளவில் இவ்வாறு ஆமைக் குஞ்சுகள் விழுந்துள்ளன. கடும் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் வானிலிருந்து கூரை மீத...
36 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக தமிழ் அமைச்சர் ஒருவரின் கையில் தற்காலிகமாக காவல்துறை நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு சட்டம், ஒழுங்கு பதில் அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்காலிகமாக காவல்துறைத் திணைக்களம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு சிறீலங்கா அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவிவகித்தபோது, அப்போது உள்நாட்டு...
அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் ஒன்பது பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து ஆண்களும், பெண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஆழ்கடல் கப்பல் ஒன்றின் மூலம் நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து குறித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவினர் வழங்கிய...
இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சுயாதீன அதிகார சபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. பிரித்தானியாவில் செயற்படுத்தப்படும் முறைமையை போன்றே, இவற்றை செய்வதற்கு அரசாங்கம் ஆலோசித்துள்ளது. இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாக அறியமுடிகின்றது.
"சிங்கள மாநிலம், தமிழ் மாநிலம் என இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்."- இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளது கடும் போக்கு இனவாத அமைப்பான சிங்கள ராவய. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அப்பதவியிலிருந்து விலகி சிங்களவர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும் என்றும்...
பொதுமக்களுக்கு சுமை அதிகரிக்காத வகையில் வற் வரியை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு அனுமதி வழங்கிய பின்னர், வற் வரி (பெறுமதிசேர் வரி) விவகாரம் பற்றி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போதே...
ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவு எயிட்ஸ் நோய் பரவுவதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ் வருடம் அடையாளம் காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களே என, பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இவ் வருடத்தின் கடந்த 3 மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், ஆயுதங்களுடன் காலியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்தவொரு வரி யோசனையையும் செயற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்கள் என்ன கூறினாலும், மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த முடியாது என, அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பற்றி சிந்திக்காத பொருளாதார நிபுணர்கள் இருப்பின் அவர்கள் பணியை விட்டு நீங்கிச் செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் நிலை மகிழ்ச்சியளிக்கும் மட்டத்தில் இல்லை என அவரது குடும்ப மருத்துவர் கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மதுபானம் அருந்துவதை குறைத்து கொள்ளுமாறும் இல்லையென்றால், கல்லீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால், குறைந்தது மூன்று மாதங்களுக்காவது மதுபானத்தை மட்டுப்படுத்துமாறும் மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக...
எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல், பெறுமதி சேர் வரி (வட் வரி), 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படும் என்றும் இதனால் நுகர்வோர் மாத்திரமன்றி,சிறு மற்றும் மத்தியதர வியாபாரிகளும் பாதிக்கப்படுவர் என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதாரச் சேவைகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைகள் போன்று தகவல் தொடர்புப்...
தேசிய அரசாங்கம் அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துவிட்டது. வற் வரி 15 வீதமாக அதிகரிக்கப்படுவதன் காரணமாக தொலைபேசி கட்டணங்களும் தனியார் மருத்துவ ஆலோசனை சேவை கட்டணங்களும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்மூலம் சாதாரண மக்களே பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண நிலமைகள் தொடர்பிலும், காணி அபகரிப்புத் தொடர்பிலும், 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பிலுமே இந்தக் கலந்துரையாடல்...
இந்த முறை புத்தாண்டிற்கான சுப நேரம் கணிக்கப்பட்டது அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே என்று ஜோதிடர்கள் தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கண்டி மல்வத்து அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம், புத்தாண்டு சுப நேரம் குறித்து ஊடகவியலாளர்கள் கருத்து கேட்ட போது மஹிந்த ராஜபக்ஷ...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பணச்சலவை குற்றச்சாட்டு சம்பந்தமாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வருவதுடன் பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த...
மாகாணங்களின் தேவைக்கேற்ப மாநிலங்களை உருவாக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்டத்துக்குத் தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ. வடக்கு, தெற்கு என இரு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை தனது அரசமைப்புத் தீர்வை முன்வைத்தது. இந்நிலையில் தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்று...
மாத்தளை லக்கல காவல்துறை நிலையத்தில் பாதுகாப்புப் பெட்டி ஒன்றில் பாதுகாப்பாக பூட்டிவைக்கப்பட்டிருந்த ஒரு ரி-56 துப்பாக்கியும், 5 கைத்துப்பாக்கிகளும் களவாடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று அதிகாலை சாரம் மற்றும் சேட் அணிந்த ஒருவரால் பாதுகாப்புப் பெட்டியில் பூட்டிவைக்கப்பட்டிருந்த ரி-56துப்பாக்கி ஒன்றும், ஐந்து கைத்துப்பாகிகளும் களவாடப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர் லக்கல உப பாதுகாப்பு...
தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். 'இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின்...
Loading posts...
All posts loaded
No more posts
