- Monday
- July 13th, 2026
இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவலை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் சில்வா மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இரத்மலானை, ஞானானந்த பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில்...
இன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீரியா காரணமாக தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது. காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒரு வருடத்துக்கும் குறைவான வயதை உடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழக்கும் 8 ஆவது குழந்தை இது எனவும் தென் மாகாண சுகாதார...
பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரிந்துரைத்துள்ளதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்....
நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக இன்று (23) இரவு முதல் மழை அதிகரிக்கும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் பலத்த...
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக...
இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தென் பகுதியை ஆட்டிப்படைக்கும் வைரஸ் தொற்று நாடு மூடுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தொற்றால் இதுவரை 600ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் முன் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்புளுவென்சா...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38 ஆயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போதே குறித்த 8 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது....
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்ற நிலையில், தெற்கில் சில இளைஞர்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இனவாதத்தை தூண்டும் வகையிலும், இலங்கையில் மௌனித்துப்போன விடுதலைப் புலிகளை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும்...
வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜே.வி.பி.-யினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் உயிரிழந்த...
வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு அரசியல்வாதிகள்...
எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி அன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்தியாவுடனான எட்கா (ETCA) உடன்படிக்கை உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...
இலங்கையில் புகழ் பூத்த இராவணா எல்ல நீர்வீழ்ச்சியை காணவரும் சுற்றுலா பயணிகள், அங்கு குளிக்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பண்டாரவளையில் தற்போது நிலவும் அடை மழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் குறித்த நீர்வீழ்ச்சியில் ஆபத்தான நிலைமை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதி கிடைத்துள்ள போதிலும், அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமக்கான ஊதியம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தும், அதற்கான அனுமதியை வழங்குமாறும் குறித்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை...
இலங்கை மின்சார சபையில் பெருமளவு மோசடிகள் இடம்பெறுகின்றன என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார். “இலங்கை மின்சார சபைக்கு வரும் ஒவ்வொரு நிலக்கரி கப்பலுக்கும் 120 மில்லியன் ரூபா மோசடி செய்யப்படுகிறது. விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் ஒவ்வொரு அலகுக்கும் 14 ரூபா மோசடி செய்யப்படுகிறது. மின்சாரத் துறையில் முதலீடு செய்ய முன்வந்த வெளிநாட்டு...
உழைப்பின் மகிமையை உலகிற்கு எடுத்தியம்பும் தொழிலாளர் தினம், இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. மே முதலாம் திகதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினமானது, வெசாக் வாரத்தை முன்னிட்டு இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது. அந்தவகையில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பேரணிகளும், ஊர்வலங்களும் இடம்பெறவுள்ளன. இற்றைக்கு 132 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் திரண்ட தொழிலாளர்கள் 8...
முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. சிங்கபூருடனான வர்த்தக உடன்படிக்கை மற்றும் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்ட மூலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக வழங்கப்பட்ட...
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் 91 எச்.ஐ.வி நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக பாலியல் சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாலியல்சார் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் டிலானி ராஜபக்ஷ கூறுகையில், "கடந்த வருடம்...
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்படி புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு, பிரதி அமைச்சர்கள் 1. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி – முத்து சிவலிங்கம் 2. மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி...
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டு எதிர்க் கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பந்துல இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது இவர் மேலும்...
Loading posts...
All posts loaded
No more posts
