- Wednesday
- October 14th, 2026
விக்ரம் பிரபு நடிப்பில் ‘வாகா’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ‘வீர சிவாஜி’ படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஷாமிலி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்குப் பிறகு ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ படம்...
சென்னையில் கடந்த சில நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த மழையால் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது....
சிவகார்த்தி கேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரஜினிமுருகன்' வருகிற 4–ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி... நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் 'ரஜினி முருகன்' திரைப்படத்தில் இடம் பெற்ற "என்னம்மா இப்படி பண்றீங்களே மா" பாடல் அனைத்து தரப்பு...
இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிகராக மாறிவிட்டனர். பல வெற்றி படங்களையும் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இடம் பிடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான தில் ராஜு சமீபத்தில் நடந்த விழாவின் போது, தேவிஸ்ரீ...
விஜய் நடிக்கும் அவரது 59–வது படத்துக்கு ‘தெறி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வேதாள உலகம் இடம் பெற்றது. இதையடுத்து அஜீத் படத்துக்கு ‘வேதாளம்’ என்று பெயர் சூட்டடப்பட்டது. இந்த படத்தில் அஜீத், ‘தெறிக்க விடலாமா’ என்று பேசும் வசனத்தை தொடர்ந்து விஜய் படத்துக்கு ‘தெறி’ என்று பெயர் வைத்துள்ளனர் என்று...
தமிழகத்தில் 2 வாரங்களுக்கும் மேல் கனமழை பெய்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளில் அரசு தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் பலர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். இந்த நிதியை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி...
பிரபல நடிகர் கார்த்திக் உடல் நலககுறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்தது. மேலும் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் பரவின. கார்த்திக்கின் உடல் நலம் குறித்த வதந்திகளுக்கு சரியான விளக்கத்தை கௌதம் கார்த்திக் பதிவு செய்துள்ளார். அவர் கூறும்போது, "என் அப்பா...
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘கபாலி’. இப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள். அடுத்த கட்டமாக கோவா செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவில் ஒரு...
பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நேற்று முன்தினம் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நாட்டின் சகிப்பின்மை பிரச்சினையால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என்று மனைவி கிரண் என்னிடம் கேட்டார். இது நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருவதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். அமீர்கானின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. யாரும் நாட்டை...
நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மைக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் வன்முறையில்லாமல் கவித்துவமாக இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ரகுமான் அளித்துள்ள பேட்டியில் “அனைத்து எதிர்ப்புகளும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும், எந்த ஒரு எதிர்ப்பும் வன்முறையற்றதாக இருப்பதே சிறந்தது. ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் அணுகுமுறை கவித்துவமாக உள்ளது. மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ள...
பழம் பெரும் நடிகையான ஜெயச்சித்ராவின் மகன் அம்ரேஷ். ஜெயச்சித்ரா தன் மகனை பெரிய நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ‘நானே என்னுள் இல்லை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். அப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. ஆனால் இப்படம் சரியாக ஓடாததால் நடிப்பை விட்டு விடவேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். இசை மீது கொண்ட ஆர்வத்தால் அப்படத்திற்கு...
சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பலியான குருநாகல், கலேவெலயைச் அபு ஷுராயா என்பரோடு, இன்னும் 16 இலங்கையர்களும் அக்குழுவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை துரிப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவர்களது சஞ்சிகையான தாபிக்கின் 12ஆவது பதிப்பிலேயே, அபு ஷுராயா தொடர்பான...
சிவகார்த்திகேயன் – கீர்த்திசுரேஷ் நடித்த ‘‘ரஜினி முருகன்’’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படம் தொடர்பாக இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன. எனவே, இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்....
தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய அருண் விஜய், அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் வில்லனாக பேசப்பட்டார். இதைத் தொடர்ந்து இவருக்கு வில்லன் வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வருகிறது. அதன்படி, தற்போது கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றபோது, இந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க...
நடிகர் அமீர்கானின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, டெல்லி புது அசோக்நகர் போலீசில் அங்குள்ள வசுந்தரா என்கிளேவ் பகுதியில் வசிக்கும் ஒருவர் புகார் செய்துள்ளார். அதில் அவர், “நானும் இந்த நாட்டின் குடிமகன்தான். பிரபலங்கள் பேசுவதற்கு முன், நாம் என்ன பேசுகிறோம் என்று எண்ணிப்பார்த்து பேச வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். “அமீர்கான் எந்த சமூகத்தில் வசித்து வருகிறார்...
ரஜினியின் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘எந்திரன்’. இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம், வசூலிலும் பிரம்மாண்டம் படைத்தது. இதுவரை எந்த படங்களும் செய்யாத வசூல் சாதனை படைத்த, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிர ஆர்வம் காட்டினார். இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினியும் பச்சைக் கொடி காட்டினார்....
புலி’ படத்திற்கு விஜய் தனது 59-வது படமாக அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்படிப்பு சமீபத்தில் சென்னையில் கொட்டிய அடை மழையிலும் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் கிடைத்த நேரத்தில், தனது படக்குழுவினருடன் இணைந்து...
தமிழுக்காகவும், தமிழ் உணர்வுக்காகவும் மீண்டும் சினிமாவில் நடிக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது இளைய மகன் சண்முகபாண்டியனுடன் இணைந்து "தமிழன் என்று சொல்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், விஜயகாந்த் பேசியது: அரசியல் பிரவேசத்துக்குப்...
அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வந்த ‘கககபோ’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கேசவன். இவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் மலேசியாவில் பெற்றோருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தவறி விழுந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை மலேசியா காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர்...
தமிழ் பட உலகினர் மத்தியில் ராசி பார்க்கும் பழக்கம் ரொம்ப காலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. எம்.ஜி.ஆரை வைத்து தேவர் தயாரித்த படங்களில் முதல் காட்சியாக வெற்றி, வெற்றி என்ற வசனம் இடம்பெறும். மறைந்த நடிகர் பாலாஜி தயாரித்த படங்களில் கதாநாயகன் பெயர் ராஜா, கதாநாயகி பெயர் ராதா என்று இருக்கும் அந்த பெயர்களை அவர் ராசியாக...
Loading posts...
All posts loaded
No more posts
