- Tuesday
- October 13th, 2026
கமல் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என உருவான ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே...
விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் `சாமி' படத்தில் நடித்த த்ரிஷாவையே `சாமி-2' விலும் நடிக்க...
இயக்குனர் கவுதம் மேனன் படத்துக்கு படம் ஏதோ ஒரு வகையில் புதுமை செய்து தன் படத்தை பற்றி பேச வைத்துக் கொண்டிருப்பார். அந்த வரிசையில் அவர் தற்போது இயக்கி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இரண்டு பாடல்களை வெளியிட்டிருப்பவர், இசை அமைப்பாளர் யார் என்பதை வெளியிடாமல் மிஸ்டர் எக்ஸ் என்ற பெயரில் சஸ்பென்சாக...
தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்' வடிவேலு. நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்து தரப்பினரையும் சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார். சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெறாத...
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் கூறுகிறது. இந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர், பிரபல ஹாக்கி வீரர் தியான்சந்த் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக...
தனது பெயரில் ட்விட்டரில் வெளியான பிரபலங்களின் கசாமுசா புகைப்படங்கள், வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாடகி சுசித்ரா. பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு...
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இதில் அஜித்துடன் காஜல்அகர்வால், அக்சராஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முக்கிய வில்லனாக இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படம் இந்தி சினிமா ரசிகர்களையும் கருத்தில் கொண்டு தயாராகி வருவதால், விவேக் ஓபராய்க்கும் அதிக முக்கியத்துவம்...
தமிழ் சினிமாவில் மருத்துவத்துறையின் அவலங்களை வெளிச்சம் போட்ட படங்களில் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா முக்கியமான படமாக இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்திலும் மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக் கேட்கிறாராம் விஜய். இந்த படத்தில் அப்பா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக படமாக்கி விட்ட அட்லி, தற்போது...
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்....
36 வயதினிலே படத்திற்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவர உள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய ஜோதிகா “பெண்களுக்கு மரியாதை கொடுங்கள், ஒரு படத்தில் நாயகனுக்கு 4 நாயகிகள் வைக்காதீர்கள், நாயகன் பின்னால் நாயகி சென்று ஐ லவ் யூ சொல்வது போன்ற காட்சிகளை நிறுத்துங்கள்,” என திரைப்பட...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய படப்பிடிப்பில் வடிவேலு, விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை ராஜஸ்தான், சென்னை என ரொம்பவும் வெப்பமான...
சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ்...
தமிழ் சினிமா எம் ஜி ஆர், சிவாஜி என்கிற இரு ஆளுமைகள் நடித்துக் கொண்டிருந்த போது தங்களுக்கென்று ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார்கள். அதைத் தாண்டி தங்களுக்கு பாராட்டு விழா நடத்தவோ, பட்டங்கள் வேண்டியோ மத்திய மாநில அரசுகளிடம் மனு கொடுத்ததில்லை. இதற்காக திரையுலகின் சங்கங்கள், அமைப்புகளை தங்கள் வசதிக்கு வளைத்துக் கொண்டதுமில்லை. வாரக் கடைசியில் சொந்த...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் தற்போது `சபாஷ் நாயுடு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, சிக்கலில் இருந்த `விஸ்வரூபம்' படத்தின் இரண்டாவது பாகத்தை வெளியிடவும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளரும், 'நடிகவேல்' எம் ஆர் ராதாவின் பேரனுமான அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. இப்படத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி முன்னணி...
இந்தி நடிகர் அக்ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது. இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் `2.ஓ'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் இப்படத்தின்...
நடிகர் தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கில் மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதியரின் மகனான இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது தயாரிப்பாளர், இயக்குநர்...
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. ஏஏஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடங்கல்களுடன் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சிம்பு நான்கு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஏஏஏ படம் பற்றி புதிய தகவல் வெளியானது. அதாவது,...
‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போன்றே இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், தற்போது மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா காஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கப்போவதாக...
Loading posts...
All posts loaded
No more posts
