Ad Widget

விகடனில் 2012 இல் வெளியான பேட்டி பெண்போராளிகளை தவறாக பொதுமைப்படுத்தி சித்தரித்தமைக்கு மன்னிப்புக்கோருகின்றேன் -அருளினியன்

2012 ம் ஆண்டு ஆனந்த விகடனில் அநாமதேயமான  முன்னாள் போராளி ஒருவரின்   பேட்டி வெளியாகியிருந்தது அப்பேட்டியில் முன்னாள் போராளி ஒருவர் தான்பல்வேறு கொடுமைகளை சந்தித்து பாலியல் கொடுமைகளுக்கு உள்ளகிய நிலையில் வேறுவழியின்றி தற்போது  பாலியல் தொழில் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் கூறியதாக வெளியாகயிருந்தது. அந்த பேட்டியினை கண்டவர் ஈழத்து மாணவ பத்திரிகையாளரான அருளினியன் ஆவார்....

வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் யாழ் இலக்கியக் குவியமும் இணைந்து நடாத்தும் வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29-05-2016) மாலை 3.45 க்கு புதிய உயர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மருத்துவர் சோதிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் திரு.சித்தாந்தன் ( ஆசிரியர் மறுபாதி சஞ்சிகை) அவர்கள் “இணையத்தில் இலக்கியப்படைப்புகள்” என்னும் தலைப்பிலும், “வலைப்பதிவுத் தொழில் நுட்பங்கள்”...
Ad Widget

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் சி. சிவசரவணபவன் (சிற்பி) அவர்கள் இன்று (09-11-2015) காலமானார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10-11-2015) செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணியளவில் கந்தரோடையில் நடை பெற்றுத் தகனக் கிரியை கந்தரோடை இந்து மயானத்தில் நடை பெறும். 1933ல் காரைநகரில் பிறந்த இவர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார்.உசன்...

மாற்றத்திற்காக அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும்

தமிழ் தேசியத்தின் புதிய அரசியல் போராட்டப் பாதைக்காக வழிகாட்டும் மாற்றத்திற்கான அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு வாக்களிக்க முன்வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 5 வருடமாக தமிழ் மக்களுடைய நலன்கள் அனைத்தினையும் திட்டமிட்டு புறக்கணித்து, மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிய தலமைகளை...

புதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க ஏன் தயக்கம்? பொ.ஐங்கரநேசன் கேள்வி.

புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.யாழ். தியாகி அறக்கொடை நிலையத்திலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நேற்று மாலை ஊடகவியலாளரும் கவிஞருமான செல்வக்குமாரின் ஊசல் கவிநூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ் விழாவுக்கு ஐங்கரநேசன் தலைமை தாங்கி நடாத்தி இருந்தார். அதன் போது...

யாழில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் தனிநாடகம் ஒன்றை அரங்கேற்றிய திருநங்கை!

யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். (more…)

‘யாழ்ப்பாண வாழ்வியல்’ நூல் வெளியிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்து வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினால் யாழ்ப்பாண வாழ்வியல் என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. (more…)

ஆளுனர் விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் வடமாகாண ஆளுனர் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. (more…)

காதலர் தினம் யாருக்கு?

இன்று காதலர் தினம் என்று பலர் மயக்கத்தில் அலைவார்கள்.உண்மையில் இது காதலிப்போர் தினம் அல்ல.அன்பை கொண்டாடுவோர் அல்லது நேசிக்கும் மனதினருக்கான ஒரு நாள்.என்ன வகையான் தினம் என்றாலும் அது மேலை நாட்டில் இருந்துதான் நமக்கு இறக்குமதி யாகிறது.இந்த தினங்களில் குறிப்பிட்ட விடயத்தை விட வியாபர நோக்கங்களே அடிப்படை அமைப்பாக விருப்பமாக கொண்டுள்ளது.அதற்காகவே ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படவும்...

யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்கம் மீளவும் புத்தெழுச்சி

மொழி பண்பாடு தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதுடன் அதன் தொடக்க நிகழ்வு 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்றது.தொடக்க நிகழ்வில் சங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கெனத் தற்காலிக நிர்வாகக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. (more…)