25 ஆண்டுகளாக போராடும் தாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்- சத்யராஜ்

மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என சென்னையில் பேரணியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார். மகனின் விடுதலைக்காக 25 ஆண்டுகாலமாக போராடும் தாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்றும் சத்யராஜ் தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை...

உலகத்தை மாற்றிய 10 பேர் பட்டியலில் சென்னை தொழில் அதிபர்

சென்னையை சேர்ந்த 30 வயதான இளம் தொழில் அதிபர் உமேஷ் சச்தேவ் என்பவரை அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை கவுரவித்துள்ளது. ‘தங்கள் படைப்புகள் மூலம் உலகத்தை மாற்றி வருபவர்கள்’ என்ற 10 பேர் அடங்கிய பட்டியலை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், உமேஷ் சச்தேவ் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் தன்னுடைய கல்லூரி நண்பர் ரவி சரோகியுடன் சேர்ந்து...
Ad Widget

சென்னையில் 50 வீடுகளை கடல் காவுகொண்டுள்ளது!

சென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்ததோடு நீரின் மட்டமும் உயர்ந்து வந்தது. இதனையடுத்து கடற்கரையில் அமைந்துள்ள 50 வீடுகளை கடல் அடித்துச் சென்றுள்ளது. மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள ஸ்ரீநிவாஸபுரம் என்ற இடத்திலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கடலின் நீர்மட்டம்...

ஈழ அகதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது

தமிழகம் – திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் உள்ள நான்கு ஈழ அகதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்கின்றது. தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்குமாறு கோரி, குறித்த அகதிகள் நேற்று புதன்கிழமை முதல் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களில் அவுஸ்திரேலியா செல்ல...

திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் ஈழ அகதிகள் நால்வர் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழகம் - திருச்சியிலுள்ள சிறப்பு தடுப்பு முகாமில் ஈழ அகதிகள் நால்வர் இன்று புதன்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரியே அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட வழக்கிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கிலும்...

என் மகனின் இளமை, வாழ்க்கை எல்லாமே சிறைக்குள்ளேயே ஒடுங்கி விட்டது

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியுள்ளார். மேலும் தனது மகனின் இளமை, வாழ்க்கை எல்லாம் சிறைக்குள்ளேயே அடங்கி முடங்கி ஒடுங்கிப் போய் விட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யக்கோரி...

தமிழகத்தில் இரு இலங்கை அகதிகள் பலி

தமிழகத்தின் பவானிசாகரில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இருவர் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளனர். ரவி (35), திலகன் (31) எனும் இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது. பெயின்டராக வேலை செய்து வரும் இவர்கள் நேற்று மதியம் சிறுமுகை சென்றுவிட்டு, ஒரே இரு சக்கர வாகனத்தில் பவானிசாகர் வந்து கொண்டிருந்த...

கச்சதீவில் கட்டப்படும் அந்தோனியார் தேவாலயத்துக்கு ஜெயலலிதா எதிர்ப்பு!

இலங்கை அரசு கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் ஒப்புதல் மற்றும் பங்களிப்பு இல்லாமல் புனித அந்தோனியார் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். நேற்று முன்தினம் திங்களன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஏழு தமிழக மீனவர்களை மீட்கக் கோரி எழுதியுள்ள கடிதத்தில், தேவாலயத்தை...

பேரறிவாளனின் உடல்நிலை பாதிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், வேலூர் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, வேலூர் அரச மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மெரினா கடற்கரையில் முள்ளிவாய்கால் அஞ்சலி

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மெரினா கடற்கரையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், வைகோ கலந்துகொண்டார். கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா...

கச்சதீவில் நடப்பதென்ன? இந்தியாவுக்கு இலங்கை விளக்கம்!

கச்சதீவில் பாதுகாப்புக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுவருகின்றது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் கச்சதீவில் அந்தோனியார் கோவில் அமைப்பதற்கு சிறீலங்கா கடற்படையினரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதுடன், இந்தியாவைக் கண்காணிப்பதற்காக கண்காணிப்புக் கோபுரம் ஒன்று அமைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்திய மத்திய அரசாங்கம்...

கருணாநிதிக்கு சம்பந்தன் எழுதிய கடிதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தி.மு.க தலைவர் கருணாநிதி 13-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றீர்கள்....

டெல்லியில் கற்பழிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: சோனியா, கெஜ்ரிவால் நேரில் ஆறுதல்

தென்கிழக்கு டெல்லி புறநகர் பகுதியில் உள்ளது புல் பிரகலாத்பூர். இந்த ஊரை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமி உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த 17–ந் தேதி சிறுமி காணாமல் போய் விட்டார். இந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நினைவிழந்த நிலையில் உதவி கேட்டு கதறிக்கொண்டு இருந்தார். தகவல் கிடைத்ததும்...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் மு.க ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற எம்.எல்.ஏ கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மு.க ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக சட்டமன்ற துணைத் துலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக கொறடாவாக சக்கரபாணி, துணை கொறடாவாக கு.பிச்சாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்பு

தமிழக முதல்வராக இன்று திங்கட்கிழமை மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றார்.அவருக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுகவின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்ற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. சரியாக மதியம் 12 மணிக்கு நடந்த இந்த பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ரோசய்யா,...

இந்தியாவின் நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி

தமிழகத்தில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, குஐராத்தில் ஆனந்திபென் படேல், ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முப்தி, என இந்தியாவின் நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி புரியும் விநோதம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தமிழகத்தில் ஜெயலலிதாவும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சி அமைக்கின்றனர். இருவரது கட்சியும்...

தமிழகத்தின் புதிய அமைச்சரவை அறிவிப்பு!

தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா, புதிய அமைச்சரவையில் பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியலையும் அவரிடம் கையளித்தார். முதல்வர் ஜெயலலிதா இன்று திங்கட்கிழமை12 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம் முதல்வர்...

இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியாவின் உதவி!!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. கொச்சியியில் உள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்தில் இருந்து, ஐஎன்எஸ் சுகன்யா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் மற்றும், ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கப்பலில் ஆகியவற்றில், இந்தியாவின் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது....

நடிகர் கருணாஸ் வெற்றி

திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார். திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கருணாஸ் 76,786 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திவாகரன் 68,090 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதி சாதனை வெற்றி!!

திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி மகத்தான வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 13-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்கு தேர்வாகியுள்ளார் கருணாநிதி. அதிமுக வேட்பாளரை விட 68,366 வாக்குகள் அதிகம் பெற்று கருணாநிதி மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இதுவரை போட்டியிட்ட தேர்தல்களிலேயே இந்த தேர்தலில் தான் கருணாநிதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts