வைத்தியசாலைகளில் குவிக்கப்படும் முப்படையினர்!

வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினர் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 06.30 மணி முதல் சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன....

மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை!

அடுத்த வாரம் முதல் மீண்டும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் 400 கிராம் பால் மா பொதி​யொன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 15 வீதம் முதல் 18 வீதம் வரை VAT அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Widget

யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார். இந்தியாவிலிருந்து வரும் காற்று நாடு முழுவதும் கடந்து செல்வதே இதற்குக் காரணமாகும். எனவே,...

அம்புலன்ஸ் படகு வர தாமதமானதால் இளைஞன் மரணம்!

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனலைதீவை சேர்ந்த தர்சன் (வயது 23) எனும் இளைஞன் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த...

வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெப்ரவரி மாத இறுதிக்குள் அடையாள எண் பெப்ரவரி இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திலோ அல்லது பிரதேச செயலகத்திலோ அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்...

கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்த 2 வயதுச் சிறுமியும், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியொருவரும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரக்காபொலையைச் சேர்ந்த 26 வயதான நபரும், மொரட்டுவையைச் சேர்ந்த 57...

தமிழரசுக் கட்சிக்குள் இணக்கப்பாடுகள் இல்லை : இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று (11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக்...

வேலணையில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் மீட்பு!

வேலணையில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்.குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் ஆய்வுத்...

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையதளம் அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன் போது வேலணை வலிகாமம் மேற்கு நெடுந்தீவு வடமராட்சி தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கும் பருத்தித்துறை நகர சபைக்குமான உத்தியோகப்பூர்வ...

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றம்!

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. `ஒரு சில அரச ஊழியர்கள் தமது பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிப்பதில்லை எனவும், சரிவர நேரமுகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லையெனவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே~ குறித்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் இருந்து கடமைகளில்...

யாழ் யுவதி நோர்வேயில் சுட்டு கொலை!!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பல் மருத்துவரை நோர்வே வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் சனிக்கிழமை(06) நோர்வே பொலிஸார் அவரது முன்னாள் காதலனை கைது செய்துள்ளனர். 30 வயதான பல் மருத்துவர் வரதராஜன் ராகவி, தனது முன்னாள் காதலரான நோர்வே நாட்டவரால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸில் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார். எவ்வாறாயினும்,...

என்னை கொல்லவந்த பெண்ணை நான் மன்னித்துவிட்டேன், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன் – டக்ளஸ்

தன்னை கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்மணியை தான் மன்னித்து விட்டதாகவும், அவரது விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி, அவரது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த...

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

உண்மையில் நல்லிணக்கம் என்றால் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 12 பேரையும் விடுதலை செய்யுங்கள் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினது வடக்கு நோக்கிய விஜயத்தை முன்னிட்டு கடந்த வாரம் முதல், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையினை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது....

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வு!

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை மத தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. வடக்கில் யுத்தத்தினால்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது....

விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்!

நாடளாவிய ரீதியில், எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு தடுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை...

2025 இல் இடம்பெயர்ந்தோர் இருக்கக்கூடாது – ஜனாதிபதி

2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பிரச்சினைக்கு தீர்வுகாண அவசர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வரி இலக்கத்தை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் : இறைவரித் திணைக்களம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம். எனவே, விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித்...

கில்மிஷாவை நேரில் சந்தித்த ஜனாதிபதி!

கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்தினார். வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக நேற்று வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவையும் சந்தித்தார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்தார்.

அரச ஊழியர்களுக்கு தைப் பொங்கலின் பின்னர் பல சலுகைகள்!! யாழில் ஜனாதிபதி

இவ்வருடம் தைப் பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து மக்களும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தாம் நன்கு அறிவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய...
Loading posts...

All posts loaded

No more posts