- Tuesday
- September 9th, 2025

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் முன்னதாக வௌிப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடந்த 12ம் திகதி அந்த பாடத்தின் இரண்டாம்...

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை...

சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர்,தனது தலைமுடியைப் பயன்படுத்தி 1550 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற குறித்த சாதனை நிகழ்வில், 60 வயதான திருச்செல்வம் தனது தலைமுடியினைக் கொண்டு 19 நிமிடம் 45 செக்கன்களில் 1500 மீற்றர் தூரம்...

வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினர் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 06.30 மணி முதல் சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன....

அடுத்த வாரம் முதல் மீண்டும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 15 வீதம் முதல் 18 வீதம் வரை VAT அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார். இந்தியாவிலிருந்து வரும் காற்று நாடு முழுவதும் கடந்து செல்வதே இதற்குக் காரணமாகும். எனவே,...

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனலைதீவை சேர்ந்த தர்சன் (வயது 23) எனும் இளைஞன் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த...

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெப்ரவரி மாத இறுதிக்குள் அடையாள எண் பெப்ரவரி இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திலோ அல்லது பிரதேச செயலகத்திலோ அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்...

நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்த 2 வயதுச் சிறுமியும், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியொருவரும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரக்காபொலையைச் சேர்ந்த 26 வயதான நபரும், மொரட்டுவையைச் சேர்ந்த 57...

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று (11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக்...

வேலணையில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்.குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் ஆய்வுத்...

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண ஆளுநரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன் போது வேலணை வலிகாமம் மேற்கு நெடுந்தீவு வடமராட்சி தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கும் பருத்தித்துறை நகர சபைக்குமான உத்தியோகப்பூர்வ...

அரச ஊழியர்களின் பணிநேரத்தில் அதிரடி மாற்றமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. `ஒரு சில அரச ஊழியர்கள் தமது பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிப்பதில்லை எனவும், சரிவர நேரமுகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லையெனவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே~ குறித்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் இருந்து கடமைகளில்...

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பல் மருத்துவரை நோர்வே வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் சனிக்கிழமை(06) நோர்வே பொலிஸார் அவரது முன்னாள் காதலனை கைது செய்துள்ளனர். 30 வயதான பல் மருத்துவர் வரதராஜன் ராகவி, தனது முன்னாள் காதலரான நோர்வே நாட்டவரால் துன்புறுத்தப்படுவதாக நோர்வே பொலிஸில் இதற்கு முன்னர் பல முறைப்பாடுகள் செய்துள்ளார். எவ்வாறாயினும்,...

தன்னை கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்மணியை தான் மன்னித்து விட்டதாகவும், அவரது விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி, அவரது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த...

உண்மையில் நல்லிணக்கம் என்றால் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 12 பேரையும் விடுதலை செய்யுங்கள் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினது வடக்கு நோக்கிய விஜயத்தை முன்னிட்டு கடந்த வாரம் முதல், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையினை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது....

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை மத தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. வடக்கில் யுத்தத்தினால்...

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது....

நாடளாவிய ரீதியில், எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு தடுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை...

2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பிரச்சினைக்கு தீர்வுகாண அவசர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

All posts loaded
No more posts