- Monday
- March 30th, 2026
நேற்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன் போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு...
சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில்...
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மைதானத்துடன் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டு திட்டமும்...
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்....
மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று புதன்கிழமை (04) அதிகாலை இரண்டு இளைஞர்கள் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இருவருக்கு பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பி தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதான அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை செப்டம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை ஓர் இடத்தில் ஒன்றுதிரட்டி காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதாகவும், வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுப்பதாகவும் வாக்குறுதிகளை கூறி மக்களிடம்...
இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தினால் தமிழ் மக்களை பழிவாங்கும் மோசமான செயற்பாட்டில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இதனுடாக நாங்கள் எடுத்த தீர்மானம் சரி என்பது உறுதியாகியுள்ளது. எம்முடன் இணங்கிய விடயங்களையும், பகிரங்கமாக குறிப்பிட்ட விடயங்களையும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நிறைவேற்ற வேண்டும், இல்லையேல் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கையை விடுக்கிறேன் என இலங்கை...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தக வகுப்பு வசதிகளை பயன்படுத்தி பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகள் குழுவினால் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 36 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று...
தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது. தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாட்டினை அரசியல் தீர்வு...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,...
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 28ஆம்...
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போதைய பொறுப்புகள் அடிப்படையில் சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% முதல் 50% வரையிலான அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச சேவை சம்பள...
தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. இதன்போது, சிறீதரனால் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் பொன்னாடை போர்த்தி,...
நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். நெல்லியடி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ,இடம்பெற்ற குறித்த வாள்வெட்டு சம்பவத்தில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் இளைஞனே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில்...
வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை தேறி வருவதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல்...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் சிந்துஜா எனும் இளம்தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா எனும் இளம் தாய், அதிக இரத்தப்போக்கு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மன்னார் பொது...
யாழ்ப்பாணத்தில் நேற்று ஏற்பட்ட மினசூறாவளி காற்று காரணமாக குருநகர் பகுதியில் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடத்தின் கூரை பறந்து சேதமடைந்தது. குறித்த அனர்த்தம் காரணமாக மூன்று குடும்பங்கள் பகுதியவில் சேதமடைந்ததுடன் 11பேர் பாதிப்படைந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டது. அதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட...
தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும்...
Loading posts...
All posts loaded
No more posts
