வட, கிழக்கில் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள்!!

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) சனிக்கிழமை வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டம்...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த புதைகுழியில்...
Ad Widget

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்க, ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க எதிர்வரும் 01ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதியின் அன்றைய நாளுக்கான செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 01ஆம் திகதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன்...

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை அகழ்வாய்வு தளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் போது புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மேலும் 03 எலும்புக்கூட்டு...

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற மேயர்கள், தவிசாளர்களுடன் விசேட சந்திப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்றது. பதில் பிரதம செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம் கலந்துரையாடலில் பங்கேற்றவர்களை வரவேற்றார்....

ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்!!

இலங்கை ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (27) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இலங்கை ரயில்வே நிலைய அதிபர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற அரச வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி அயேஷானி...

இளைஞன் உயிரிழப்பு ! இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 07.08.2025 அன்று முத்துயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் நால்வரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து...

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு!

இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் இடம்பெற்று நேற்றுடன் 35 வருடங்கள் கடந்துவிட்டன.குறித்த படுகொலையின் நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அந்தவகையில் படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவுகளில் இருவர் முதன்மைச் சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர். குறித்த...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் எனவும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அக் கட்சியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்....

இலங்கையின் நான்காவது பெரிய மனித புதைகுழி கொழும்பில்!

கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது. தற்போதைய அரசாங்கம் போதுமான நிதியை வழங்கத் தவறியதால் ஆரம்பத்தில் அகழ்வுப் பணிகள் தாமதமான கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 88...

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு – விசாரணை திகதி அறிவிப்பு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்...

பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை எட்டு மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து போராட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டு பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்றிருந்ததுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. பருத்தித்துறை...

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் வந்த குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல்!!

இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட்...

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 8.00 மணி...

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (24) வருகை தந்த அமைச்சர், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன்...

அரச மருத்துவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

மருத்துவர்களின் இடமாற்றத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படும் அவதான நிலை ஆகிய காரணிகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் திங்கட்கிழமை (25) காலை 08 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சகல அவசர சிகிச்சை சேவைகள்,மகப்பேறு வைத்தியசாலைகள்,சிறுவர் வைத்தியசாலைகள்,புற்றுநோய் வைத்தியசாலை (மஹரகம),சகல சிறுநீரக நோய் பிரிவு,இராணுவ வைத்தியசாலை,தேசிய மனநல வைத்திய நிறுவனம் ஆகியவற்றின்...

கொட்டடியில் ஏராளமான ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது. இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இதனைப் பொலிசார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்தவகையில் இன்றையதினம் குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா...

ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து...

மனிதப் புதைகுழிகள் : சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்!!

மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் அமைப்பின் தலைவி யோகராசா கலாறஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts