- Tuesday
- July 7th, 2026
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால்...
லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு: 12.5 கிலோ சிலிண்டர் – 4,409 ரூபாய் (201 ரூபாய் குறைப்பு) 5 கிலோ சிலிண்டர் – 1,170 ரூபாய்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும்...
நாட்டில் இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும்வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 12.5. கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. Tags: எரிவாயுசமையல்
கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால் அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் இ.இரவீந்திரன் தெளிவுப்படுத்தியுள்ளார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களிற்கிடையேயான...
மக்களின் ஜனநாயக தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட மாநகர சபை நீடிப்பதை விரும்புகிறேன் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். மாநகர சபை விவகாரம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்க உள்ளீர்கள் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “மாநகர சபை முதல்வர்...
சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில்...
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய இராணுவ நடவடிக்கை 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய மகீவ்கா பகுதியில் ரஷ்ய வீரர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது உக்ரைன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 89 ரஷ்ய...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி வேட்புமனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26ம் திகதி நடைபெறவுள்ள ‘குளோக்கல் பெயார் 2023’ கண்காட்சி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பங்கேற்புடன் இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினில் நள்ளிரவு வேளை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த நான்கு பேர் அடங்கிய கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தோரை கத்தி முனையில் , மிரட்டி 10 பவுண் தங்க...
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காலை கட்சி ரீதியாக உறுப்பினர்களை சந்திக்கும் நோக்குடன் , ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு...
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட் சபை அனுமதி வழங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக இலங்கையின் இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய, Chattogram Challengers அணியுடன் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த தொடரில் பங்கேற்பதற்கு விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 314 ஆவது நாளை எட்டியுள்ளதுடன் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதன்போது கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள மகீவ்கா நகரில் தற்காலிக இராணுவ தளத்தில் 600 வீரர்கள்...
வடமாகாணத்தில் அப்பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில்...
யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது. இதேவேளை இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகரிப்பானது...
கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து சேவைக்காக மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...
அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அலுவலகங்களுக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன கூறியுள்ளார். புத்தாண்டுக்கான பணிகளைத் தொடங்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சில இடங்களில் அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் பேஸ்புக், வட்ஸ்அப்பில் உலாவிய படி சேவைகளைப் பெற வந்த...
வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (02) மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண் ஒருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, பிறந்த 4 நாட்களான...
நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 405 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts
