- Monday
- July 6th, 2026
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்களை கொள்வனவு செய்யவேண்டாம் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும்...
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைன் போருக்கு ஆள் திரட்டும் பணியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இதற்கமைய, இராணுவத்தில் சேர முன்வருவோருக்கு வரிச்சலுகை, கடன் தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த முறை, 3 இலட்சம் பேரை இராணுவத்தில் சேர்க்க அதிபர் புடின் உத்தரவிட்டபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் மோதிக்கொண்டமையை அடுத்து இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இருவர் இன்றைய தினம் (புதன்கிழமை) வைத்தியசாலை நோயாளர் விடுதிக்குள் தமக்குள் மோதிக்கொண்டனர். அதனை அடுத்து இருவருக்கும் இடையிலான மோதலை வைத்திய சாலை பாதுகாப்பு பிரிவினர் தடுத்து...
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. இன்று (புதன்கிழமை) ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 312.61 ஆகவும், விற்பனை விலை 330.16 ஆகவும் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்விலை 316.84 ஆகவும், விற்பனை விலை...
யாழ்.மாநகரசபை கலைக்கப்பட்டதன் பின்னர் மாநகரசபையில் கடமையாற்றும் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் துணையுடன் தாங்கள் நினைத்தபடி மதிய நேர உணவுக்காக வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திங்கட்கிழமை பங்குனி திங்கள் நாள் அன்று மாநகர ஆணையாளர் பகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 3 மணி கடந்தும் மதிய நேர உணவுக்கு சென்று...
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நாளை(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து...
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார் என்று தெரியவருகிறது. இந்திய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்து...
நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்ததையடுத்து அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். மேலும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் சர்வதேச குற்றவியல்...
வடமாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் ஆண்டுகளில் சுமார் 103 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் 49 பாடசாலைகளும்,...
அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மீதான விவாதத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது என்றும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆகவே எரிபொருள் விலையில்...
ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலை நேற்றை தினத்தை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின்படி இன்று டொலரின் கொள் விலை 314 ரூபாயாகவும் விற்பனை விலை 330 ரூபாயாகவும் பதிவாகியுள்ளன.
யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மகா வித்தியாலய கட்டிடம் இராணுவத்திற்குத் தாரைவார்க்கப்படவில்லை என கூறியுள்ள மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளம்பலம் உமாமகேஷ்வரன், ஆனால் கடந்த வருடம் குறித்த கட்டிடத்தை தமக்கு வழங்குமாறு இராணுவ தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டமை உண்மை எனினும் அந்த கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சு நிராகரித்துவிட்டது எனவும் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக...
அச்சுவேலி - தென்மூலை பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சட்ட மருத்துவ வல்லுனர் முன்னிலையில் இடம்பெற்ற பரிசோதனையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை மற்றும் சிறுமி போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. அச்சுவேலி தென்மூலை...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும்,...
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த உதவியினால் இலங்கையின் நிலையை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மூலதனச் சந்தைகளை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லையில் உள்ள தமிழ் கிராமமான கொக்குத்தொடுவாய் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை சுவீகரிக்கும் நோக்கோடு அளவீடுகளை செய்து காணிகளுக்கு நடுவே எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நில அளவை திணைக்களம் காணி...
தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, ◾Fast3Cycle International Pvt Ltd ◾Sport Chain App Sport Chain ZS Society ◾Srilanka Onmax...
சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியை கண்டு ரஷ்யா சற்று பொறாமை கொண்டது என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கின் அரசுப் பயணத்தின் தொடக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின், முறைசாரா...
பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி கஞ்சா கடத்தி சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதியும் பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடிகாமம் பொலிஸ்...
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையின்...
Loading posts...
All posts loaded
No more posts
